மேலக்கால் முதல் பேரணை வரை தார் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை வெங்கடேசன் எம்எல்ஏ பங்கேற்பு
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் ஊராட்சிக்கு உட்பட்ட கச்சிராயிருப்பு பிரிவு அருகே மேலக்கால் முதல் பேரணை வரை சுமார் 18 கிலோ மீட்டர் தூரம் தார் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் கலந்து கொண்டு பணியினை தொடங்கி வைத்தார். ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன் தலைமை தாங்கினார் பேரூராட்சி தலைவர் ஜெயராமன் பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் சி பி ஆர் சரவணன் முள்ளிப்பள்ளம் கேபிள் ராஜா இளைஞர் அணி வெற்றிச்செல்வன் ஊராட்சி மன்ற தலைவர் முருகேஸ்வரி வீரபத்திரன் துணைத் தலைவர் சித்தாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர் ஒன்றிய கவுன்சிலர் சுப்பிரமணி வரவேற்றார் இதில் மேலக்கால் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் நிர்வாகிகள் மாவட்ட பிரதிநிதி பேட்டை பெரியசாமி ஊத்துக்குளி ராஜா தென்கரை சோழன் ராஜா செங்குட்டுவன் மேலக்கல் பிஆர்சி ராஜா கலைஞர் முருகன் சுபேத வாகனம் மற்றும் வாடிப்பட்டி ஒன்றிய அதிகாரிகள் நெடுஞ்சாலை துறையினர் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலாளர் விக்னேஷ் நன்றி கூறினர்.