இந்தியாவின் தென் கோடி முனைப் பகுதியில் கோவில் கொண்டுள்ள தேவி பகவதியம்மன் கோவில் வைகாசி திருவிழா விழாவின் 10 ம் நாள் இரவு தெப்பத்திருவிழா நடைபெற்றது.14_ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் தெப்பத்திருவிழா வை காணா இந்த பகுதியில் உள்ள அனைத்து சுற்று வட்டாரங்களில் உள்ள 27 கிராமத்தில் உள்ள பக்த்தர்கள் குடும்பம், குடும்பமாக, தெப்பத்திருவிழா நடந்த தெப்பக்குளத்தை சுற்றி பெரும் கூட்டமாக பங்கேற்றனர்.
14_ஆண்டுகளுக்கு பின்.தெப்பக்குளத்தை செப்பனிட அறநிலையத்துறை ரூ.41_லட்சம் அனுமதித்து பணிகள் நடைபெற்றபின், நடந்த தெப்பத்திருவிழா வை காண்பதற்கு
பக்த்தர்களின் ஆர்வ வெளிப்பாட்டை காண முடிந்தது.

கன்னியாகுமரி நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் அதிமுக வை சேர்ந்த தளவாய் சுந்தரம், நாகர்கோவில் சட்ட மன்ற பாஜக உறுப்பினர் எம்.ஆர்.காந்தி, இந்த வார்டின் முன்னாள் உறுப்பினர் தாமஸ் ஆகியோர் தெப்பத்திருவிழா நிகழ்வு தொடங்குவதற்கு பல மணி நேரம் முன்பே தெப்பக்குளம் பகுதியில் அமர்ந்து பொதுமக்களில் ஒருவராக தெப்பத்திருவிழா காண காத்திருந்தனர்.
தெப்பகுளத்தின் ஒரு படித்துறையில் பரத நாட்டிய ஆடல் நிகழ்ச்சி நடைபெற்றது. மங்கள இசை ஒலிகளான நாதஸ்வரம்,சிங்காரி மேளம், பஞ்ச வாத்தியம் ஒலிக்க தெப்பத்தில் தேவி பகவதியம்மன் தெப்பத்திருவிழா நடைபெற்றது.

நேரம் நள்ளிரவை கடந்த பின்னும் பக்தர்கள் கூட்டம் கலையாதிருந்தது. கன்னியாகுமரி துணை காவல் துறை கண்காணிப்பாளர் மகேஷ் குமார் தலைமையில் பலத்த காவல் துறை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்கள்.
