- கன்னியாகுமரி: பொதுமக்களின் பாதுகாப்பை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் ஆர். ஸ்டாலின், ஐ.பி.எஸ். அவர்களின் உத்தரவின்படி,
- கடல் பாறைகள் உள்ள அபாயகரமான பகுதிகளில் பொதுமக்கள் செல்லாதவாறு தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.
- கடல் அலைகள் மற்றும் பாறை பகுதிகளால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையால், பொதுமக்கள் பாதுகாப்பு மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இதனையடுத்து, பொதுமக்களும் காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி, தங்களது பாதுகாப்பை தாங்களே உறுதிசெய்துகொள்ள வேண்டும் என காவல் துறை கேட்டுக்கொண்டுள்ளது.
- மாவட்ட காவல் துறையின் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு பெரும்பாலான பொதுமக்கள் பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துவருகின்றனர்.
கன்னியாகுமரியில் கடல் பாறைகளில் தடுப்பு வேலி அமைப்பு..,




