• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தேனி மாவட்டத்தில் முறைகேடாக மது விற்பனை செய்வதை தடுக்க வேண்டும்-அரசு பார் உரிமையாளர்கள் கோரிக்கை

ByJeisriRam

Aug 16, 2024

சட்ட விரோதமாக மது விற்பனை செய்பவர்கள் மற்றும் பெட்டிக்கடைகளில் அமர்ந்து மது அருந்தும் பழக்கத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்க தேனி மாவட்ட அரசு பார் உரிமையாளர்கள் சங்கம், மாவட்ட ஆட்சி தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேனி மாவட்டத்தில் முறைகேடாக சில்லறை மது விற்பனை செய்வதை தடுக்க வேண்டும் என அரசு பார் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு மதுபான கடைகளுக்கான பார் டெண்டர் கலந்து கொண்டு உரிமம் பெற்று அரசின் விதிமுறைகக்கு உட்பட்டு பார் நடத்து வருகிறது.

மாவட்டம் முழுவதிலும் உள்ள டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளின் அருகில் செயல்பட்டு வரும் பல பெட்டிக்கடைகளில் மது அருந்துவதற்கு தேவையான தின்பண்டங்கள், தண்ணீர்பாட்டில், கிளாஸ் போன்ற பொருட்களை வழங்கி அவர்கள் அமர்ந்து மது அருந்த வசதிகளும் வழங்குகிறார்கள்.

அரசு டாஸ்மாக் பார்களில் அமர்ந்து மதுஅருந்தும் பெரும்பாலானோர் தினக்கூலி வேலை செய்பவர்கள். இவர்கள் வழக்கமாக வேலை முடித்துவிட்டு மாலை நேரங்களில் வரும் சமயங்களில் காவல்துறையினர் பார்களின் அருகிலேயே வழக்கு பதிவு செய்வதால், பலரும் பார்களில் அமராமல் பிற இடங்கள், பொது வெளிகள், மற்றும் பெட்டிக்கடைகளில் அமர்ந்து மது அருந்துவதை வழக்கமாக்கி வருகிறது.

மாவட்டம் முழுவதிலும் டாஸ்மாக் ஏசி கடைகள் பிற்பகல் 12 மணிமுதல் இரவு 10 மணி வரை செயல்படுகிறது. டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்ட பிறகு பொது இடங்களில் பலரும் சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்து வருகிறார்கள்.

அரசு நிர்ணயித்த டிடி தொகை, இடவாடகை, வேலை ஆட்கள் சம்பளம் மற்றும் இதர செலவுகள் முடித்து மாதாந்திர கணக்கு பார்க்கும் போது எங்களுக்கு அரசு பார் உரிமையாளர்களுக்கு நஷ்டமே ஏற்படுகிறது.

எனவே சட்ட விரோதமாக மது விற்பனை செய்பவர்கள் மற்றும் பெட்டிக்கடைகளில் அமர்ந்து மது அருந்தும் வழக்கத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேனி மாவட்ட அரசு பார் உரிமையாளர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனாவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.