வி.கே. புரொடக்ஷன்ஸ் சார்பில் நிர்மல் சரவணராஜ், எஸ்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர்களது தயாரிப்பில் இயக்குனர் வி.கௌதமன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “படையாண்ட மாவீரா”
இத்திரைப்படத்தில் பூஜிதா பொன்னடா, சமுத்திரக்கனி, பிரபாகர்,சரண்யா பொன்வண்ணன், ஆடுகளம் நரேன், மன்சூர் அலிகான். ரெடின் கிங்ஸ்லி, இளவரசு,மதுசூதன் ராவ்,தமிழ் கௌதமன் உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர்.
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸின் தீவிர பக்தரும் முன்னாள் வன்னியர் சங்க தலைவருமான நாடாளுமன்ற உறுப்பினர் மறைந்த காடு வெட்டி குரு அவரது வாழ்க்கை வரலாறு பற்றி உருவாகி இருப்பது தான் “படையாண்ட மாவீரா” திரைப்படம்.

இயக்குநர் வ.கெளதமன், காடு வெட்டி குரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். என்பதை விட காடுவெட்டி குரு கதாபாத்திரமாக வாழ்ந்திருக்கிறார்.
சண்டை காட்சிகள், பன்ச் வசனங்கள், தனது குடும்பத்தை சுமக்கும் ஒரு குடும்பஸ்தன், குடும்பத்தை விட சங்கம் முக்கியம் என்று சங்கத்தை ஒருங்கிணைக்க ஒரு தலைவனாக இப்படி பல பரிமாணங்களில் தனது நடிப்பில் அபார ஸ்கோர் செய்துள்ளார் வ.கெளதமன்.
படத்தின் நாயகி பூஜிதா பொன்னாடா ஒரு குடும்ப தலைவியாகவும், காதல் மற்றும் பாடல் காட்சிகளிலும் திரையில் தோன்றி பார்வையாளர்களை ஈர்த்துள்ளார்.
சமுத்திரக்கனி, குறைவாக திரையில் தோன்றினாலும் தனது அனுபவ நடிப்பால் படத்திற்கு பலம் சேர்த்துள்ளார்.
தமிழ் கெளதமனின் உடல் மொழி மற்றும் அவரது நடைபாவனை, உணர்ச்சிமிகு பேச்சு அனைத்தும் காடுவெட்டி குருவின் சிறு வயது கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக அமைந்துள்ளது.
ஆடுகளம் நரேன், சரண்யா பொன்வண்ணன், மன்சூர் அலிகான், இளவரசு, ரெடின் கிங்ஸ்லி, மதுசூதனன் ராவ் ஆகிய அனைவரும் தங்களுக்கு கொடுத்த
கதா பாத்திரத்திற்கேற்றவாறு சிறப்பாக நடித்துள்ளனர்.
வைரமுத்து பாடல் வரிகளில் சிறப்பாக இசை இசையமைத்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.
சாம்.சி.எஸ் பின்னணி இசை படத்தின் காட்சிகளுக்கேற்றவாறு பயணித்துள்ளது.
ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஸ்வரன் கேமரா கண்கள் பார்வையாளர்களின் கண்களுக்கு குளிர்ச்சியை தருகிறது.
மொத்தத்தில், ‘’படையாண்ட மாவீரா’’ வெல்வான்.