குரோம்பேட்டை பேருந்து நிலையம் அருகே உள்ள தளபதி ஆட்டோ ஓட்டுநர் சங்கம் சார்பில் 17 ஆம் ஆண்டு ஆயுத பூஜை விழா சங்கத் தலைவர் கோபால் செயலாளர் முனுசாமி பொருளாளர் கார்த்திக் துணை தலைவர் நந்தகுமார் துணை செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக பல்லாவரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இ. கருணாநிதி மற்றும் தாம்பரம் மாநகராட்சியின் துணை மேயர் கோ காமராஜ் மற்றும் தாம்பரம் மாநகராட்சி இரண்டாவது மண்டல குழு தலைவர் ஜோசப் அண்ணாதுரை ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு பிராத்தனை ஈடுபட்டு ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஆயுத பூஜை விழாவை முன்னிட்டு பரிசு பொருட்களை வழங்கி சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியில் பல்லாவரம் தெற்கு பகுதி செயலாளர் இ எஸ் பெர்னாட், பம்மல் வடக்கு பகுதி செயலாளர் திருநீர்மலை ஜெயக்குமார், 27 வது வார்டு மாமன்ற உறுப்பினர் மகேஸ்வரி கார்த்திகேயன், 28 வது வார்டு மாமன்ற உறுப்பினர் விஜயலட்சுமி, உட்பட தளபதி ஆட்டோ ஓட்டுனர் சங்கம் நிர்வாகிகள் மற்றும் திராவிட கழகத்தின் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்…