• Fri. Oct 10th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

அயலக தமிழறிஞர் தமிழ்மாமணி தாழையரின் படைப்புலகம் பன்னாட்டு கருத்தரங்கம்!

Byஜெ.துரை

Jul 17, 2024

அமெரிக்க முத்தமிழ் இலக்கிய பேரவை உலக முத்தமிழ் கூட்டமைப்பு இணைந்து நடத்தும் சென்னை வேப்பேரியில் அமைந்துள்ள சல்வேஷன் ஆர்மி சென்டரில் அயலக தமிழறிஞர் தமிழ் மாமணி படைப்புலகம் பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது.

“மனிதரைப் பாடு மனமே” என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்கத்தில்,
இயக்குனர் யார் கண்ணன் தலைமை வகித்தார்.

உலக முத்தமிழ் கூட்டமைப்பு துணைத்தலைவர் கவிஞர் அமுதா பாரதி முன்னிலை வகித்தார்.

இந் நிகழ்வில் அயலகத் தமிழறிஞர் முனைவர் தாழை உதயநேசன் படைத்த “எண்ணமே ஏற்றம் தரும் எரிதழல் கொண்டு வா” நூல்கள் வெளியிட்டு விழாவும் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக வருகை தந்த அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் கிருஷ்ணமூர்த்தி சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர்….

என்னை இந்த துறைக்கு கடந்த 8 மாதத்திற்கு முன்பு ஆணையராக தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது.

நான் இந்த துறையில் இருப்பது மிகவும் பெருமிதம் கொள்கிறேன் தமிழ் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்றால் அயலகத்தில் இருக்கும் தமிழர்களால் இங்கு தமிழ் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

நான் இரண்டு வாரத்துக்கு முன்பு கர்நாடகாவில் அமைந்துள்ள தமிழ் சங்க விழாவில் கலந்து கொண்டேன். அப்போது என்னிடம் எங்கள் தாய்மொழி தமிழ் மொழியை நான் படிக்கும் போது மேல் படிப்பிற்காகவோ அல்லது வேலை வாய்ப்புக்கோ கனடாவில் படித்தால் எங்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள்.

நானும் அதை தமிழக கல்வித் துறை அமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ளேன்.

மாநிலங்களிலும் வெளி நாட்டிலும் இருக்கும் தமிழ் மக்கள் உயர் கல்வி தமிழை படிக்கும் போது அவர்களுக்கு முன் உரிமை இருக்கிறது என்று அறிந்து கொண்டு அதை தமிழக அரசு கவனத்திற்கு எடுத்து சென்று உள்ளேன்.

தமிழகத்திலிருந்து அயல்நாட்டுக்கு வேலைக்கு செல்பவர்களுக்கு நிறைய திட்டங்கள் கொண்டு வந்துள்ளோம்.

குறிப்பாக இன்சூரன்ஸ் மற்றும் திருமண உதவி தொகை இன்னும் அநேக உதவிகள் தமிழ்நாடு அரசு செய்து வருகிறது.

மேலும் தமிழ் மொழி வளர்ச்சிக்கும்.தமிழக அரசு பல உதவிகள் செய்து வருகிறது.

நான் என்னுடைய வாழ்க்கையில் சொல்லப் போனால் சாதாரணமாக ஒரு கடைநிலையில் இருந்து,இப்போது ஒரு நல்ல நிலைமையில் இருக்கிறேன் என்றால்

நம்மால் முடிந்தால் எதுவானாலும் சாதிக்கலாம் என்ற எண்ணம் எனக்குள் இருந்த காரணம் தான்.

அதேபோல் நீங்களும் சாதிக்க வேண்டும் கடின உழைப்பு இருந்தால் கண்டிப்பாக வாழ்க்கையில் முன்னேறலாம்.

வாழ்க்கை என்பது நாம் என்ன நினைக்கின்றோமோ அதுதான் நடக்கும்

தங்கள் பணி சிறக்க வேண்டும் தமிழ் பணி நன்றாக நடக்கட்டும் இந்த வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி என்றார்.

இதனைத் தொடர்ந்து பேசிய இயக்குனர் யார் கண்ணன்…..

அமெரிக்க முத்தமிழ் கூட்டமைப்பு இதுபோன்ற விழாக்களை நமது தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊரிலும் மாநாடு போல் நடத்திக் கொண்டு வருகிறது.

இதற்கு முதல் காரணம் அமெரிக்காவில் வாழும் தமிழர் தாழை உதயநேசன் தான்.

நான் ஒரு சினிமாக்காரனாக இருந்தும் இந்த மாதிரி ஒரு சேவை செய்ய எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

சினிமாவை தாண்டி ஒவ்வொரு விஷயமும் இருக்கின்றது என்று இந்த புத்தக வெளியீட்டு விழாவில் உணர்கிறேன்.

ஆனால் ஒரு வருத்தம் வங்காளத்திலும் மலையாளத்திலும் எழுத்தாளர்களுக்கென்று மரியாதை இருக்கிறது தமிழ்நாட்டில் கொஞ்சம் மாறி உள்ளது.

இருந்தாலும் இப்போது வெற்றிமாறன் போன்றவர்கள் நாவல் ஆசிரியர்களின் கதையை வாங்கி படம் ஆக்கி வருகின்றனர். இது ஒரு எழுத்தாளருக்கு கிடைத்த வெற்றி.

ஆனால் ஒரு சிலர் நாவலாசிரியருக்கு தெரியாமலே அந்தக் கதையை படமாக்கி உள்ளனர். படமாக்கியவரின் பெயர் சொல்ல விரும்பவில்லை.

சினிமாவை பார்த்து யாரும் வன்முறையில் ஈடுபடவில்லை நாட்டில் நடை பெறுவது தான் சினிமாவாக எடுக்கின்றோம்.

எழுத்தாளராக இருக்கட்டும் சினிமாகாரனா இருக்கட்டும் ஆனால் ஒரு தலைவரை தேர்ந்தெடுக்கும் உரிமை மக்களுக்கு தான் உண்டு மக்களே முடிவு செய்ய வேண்டும் இதுதான் என்னோட கருத்து என்றார்.