மதுரை மாவட்டத்தில் பழப்பயிர்கள், காய்கறி பயிர்கள், மருத்துவ பயிர்கள், பூக்கள் உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்கள் சுமார் 28,000 ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்யபட்டு வருகிறது.
இதில் பழப்பயிர் சாகுபடியில் மா பயிர் அதிக அளவில் சுமார் 5,600 ஹெக்டேர் கொட்டாம்பட்டி, மேலுலூர் மதுரை மேற்கு, வாடிப்பட்டி, அலங்காநல்லூர் ஆகிய வட்டாரங்களில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மா சாகுபடியில் கவாத்து செய்வது என்பது முக்கியமான பராமரிப்பபு பணியாகும். 3 ஆண்டுகளுக்கு மேற்பட்ட மரங்களில் ஆண்டுக்கு ஒருமுறை ஆகஸ்ட் – செப்டம்பார் மாதங்களில் கவாத்து செய்யப்பட வேண்டும். மா சாகுபடியில் கவாத்து செய்வது குறித்து விழிப்புணர்வு பயிற்சி 1.09.25 அன்று மேலூர் வட்டாரத்தில் பதினெட்டாங்குடி கிராமத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி மற்றும் செயல்விளக்கங்கள் செய்து காண்பிக்கப்பட்டது.

இப்பயிற்சியினை வேளாண் அறிவியல் மையம், வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய இணை பேராசிரியர் அருளரசு மா மரத்தில் கவாத்து செய்யும் முறைகள் கவாத்து செய்யப்பட வேண்டிய காலங்கள், கவாத்து செய்வதற்கு கிளைகள் தேர்வு, கவாத்து செய்த பிறகு மா மரத்தினை பராமரிப்பு செய்தல், உரமிடுதல் ஆகிய அனைத்து விபரங்களையும் விவசாயிகளுக்கு செயல்விளக்கத்துடன் எடுத்துக் கூறினார். சுமார் 25 விவசாயிகள் ஆர்வத்துடன் இப்பயிற்சியில் கலந்து கொண்டு தங்களின் சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொண்டனர்.
இப்பயிற்சியினை மேலுார் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் புவனேஸ்வரி ஏற்பாடு செய்தார். தோட்டக்கலை உதவி இயக்குநர் T. கல்லுப்பட்டி ராஜசேகர் விவசாயிகளின் மா பராமரிப்பு குறித்த கேள்விகளுக்கான விளக்கம் அளித்தார்.மேலுார் வட்டார உதவி தோட்டக்கலை அலுவலர்கள் நிறைமதி அழகுபாண்டியன் மற்றும் அகிலன் பயிற்சிகளுக்கான ஏற்பாடுகளைச் செய்தனர்.













; ?>)
; ?>)
; ?>)