புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் பொதுமக்கள் சாலையில் ஹெல்மெட் அணிந்து கொண்டு பாதுகாப்பாக செல்ல வேண்டும் உள்ளிட்ட சாலை பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டிய அதன் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் போக்குவரத்து போலீசார் 100க்கும் மேற்பட்டோர் ஹெல்மெட் அணிந்து முதல்நிலை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து கொண்டு முக்கிய விதிகளில் விழிப்புணர் பதாகைகளை வைத்துக்கொண்டு இரு சக்கர வாகன விழிப்புணர் பேரணியில் ஈடுபட்டனர்.

இந்த போக்குவரத்து போலீசார் விழிப்புணர் பேரணியை காரைக்கால் மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் லட்சுமி சௌஜன்யா கொடி அசைத்து தொடங்கி வைத்தார்கள். இந்த நிகழ்ச்சியில் கண்காணிப்பாளர் முருகையன், போக்குவரத்து ஆய்வாளர் லெனின் பாரதி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டு வீதி வீதியாக இருசக்கர வாகனத்தில் சென்று விழிப்புணர் ஏற்படுத்தி அசத்தினார்கள்.