மதுரை மாவட்டம் சோழவந்தான் அரசு போக்குவரத்து பணிமனையில் உள்ள போக்குவரத்து பணியாளர்களான ஓட்டுநர்கள் நடத்துனர்கள் மற்றும் பராமரிப்பாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வாடிப்பட்டி வட்ட சட்ட பணிகள் குழு சார்பாக விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு வழக்கறிஞர் சந்திரமோகன் தலைமையில் மூத்த வழக்கறிஞர்கள் முத்துமணி அழகேசன் ராமசாமி மற்றும் சோழவந்தான் திமுக பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் விஜயகுமார் பழனிக்குமார் உள்ளிட்டோர் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அறிவுரைகளை வழங்கினார்கள்.
இதில் சோழவந்தான் அரசு போக்குவரத்து பணிமனையின் மேலாளர் மற்றும் தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் அமிர்தராஜ் செயலாளர் பாலசுப்பிரமணியன் பொருளாளர் பாலமுருகன் துணைச் செயலாளர் முனியாண்டி துணைத் தலைவர் சக்திவேல்மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர் தொமுச செயலாளர் பாலசுப்பிரமணியன் நன்றி தெரிவித்தார்




