சென்னை அடுத்த குரோம்பேட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், தாம்பரம் மாநகர காவல்துறை சார்பில் பள்ளி வளாகத்தை புகையில்லா (போதையில்லா) பகுதியாக மாற்றும் நோக்கில் விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தாம்பரம் மாநகர காவல் ஆணையாளர் அபின் தினேஷ் மோதக், ஐபிஎஸ், பள்ளி வளாகத்தில் புகையில்லா பகுதி தொடர்பான விழிப்புணர்வு பதாகைகளை நிறுவி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். தொடர்ந்து, பள்ளி மாணவர்களுடன் இணைந்து “போதையை ஒழிப்போம், போதையில்லா பகுதியாக மாற்றுவோம்” என்ற உறுதிமொழியை ஏற்றார்.


இந்த நிகழ்ச்சியில் துணை ஆணையாளர்கள் பவன்குமார், கார்த்திகேயன், உதவி ஆணையாளர்கள் நெல்சன், வெங்கட்குமார், பிரின்ஸ் ஆரோன், கிறிஸ்டி ஜெயசீல், ரவி ஹரிராம், போக்குவரத்து உதவி ஆணையாளர் ராஜன், உளவு துறை கூடுதல் துணை ஆணையாளர் வெங்கடேசன், உளவு துறை ஆய்வாளர் சந்திரசேகர், ஆய்வாளர்கள் தயாளன், சசிகலா உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும், பள்ளியின் தலைமை ஆசிரியர் முகமது கலீம், ஆசிரியர்கள், காவல்துறையினர் மற்றும் ஏராளமான மாணவர்கள் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்று, போதைப்பழக்கங்களுக்கு எதிரான உறுதியை வெளிப்படுத்தினர்.
இந்த முயற்சி, மாணவர்களிடையே போதைப்பழக்கங்களின் தீமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி, பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்கும் வகையில் முக்கியத்துவம் பெற்றதாக அமைந்தது.




