தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் இளம் நுகர்வோர்களுக்கான விழிப்புணர்வு புத்தாக்க பயிற்சி நடந்தது.
மாவட்ட அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019 குறித்து ஒருநாள் புத்தாக்க பயிற்சி வழங்குவதை மையமாகக் கொண்டு இந்நிகழ்ச்சி நடந்தது.

மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சந்திரகுமார் வரவேற்றார். மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் தலைமை வகித்து சிறப்புரை ஆற்றினார். இதில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தயாள விநாயகன் அமுல்ராஜ், தொழிலாளர் உதவி ஆணையர் மற்றும் சட்டமுறை எடை அளவு துறை கட்டுப்பாட்டு அலுவலர் ஆனந்தன், மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை, மருந்து கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் சுடலை வேல் முருகையா ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தஞ்சாவூர் மாவட்ட சைபர் கிரைம் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி பேசுகையில், ஆன்லைனில் நடக்கும் மோசடிகளில் பொதுமக்கள் சிக்கிக் கொள்ளக் கூடாது. ஆன்லைன் கடன் வழங்கும் செயலிகளில் பணம் பெறுதல் கூடாது என்பன போன்ற விழிப்புணர்வு கருத்துக்களை தெரிவித்தார்.
இதில் நேதாஜி நுகர்வோர் விழிப்புணர்வு மைய தலைவர் சிவானந்தம், நுகர்வோர் விழிப்புணர்வு அறக்கட்டளை தலைவர் கலியமூர்த்தி, திருப்பனந்தாள் நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் மோகன், தஞ்சாவூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சசிகுமார், உபயோகிப்பாளர் பாதுகாப்பு மற்றும் பொது சேவை சங்க செயலாளர் கலியமூர்த்தி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள், அதிகாரிகள்கலந்து கொண்டனர்.
மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளர் ஜெயலட்சுமி நன்றி கூறினார்.