கோயம்புத்தூரில் நடைபெற்ற தமிழ்நாடு போர்ட் லைட்ஸ் அவார்டு நிகழ்வு நடைபெற்றது. அந்த நிகழ்வில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சமூக சேவகர் திரு ஷாருக்கான் அவர்கள் ஊர்க்காவல் படை எண் HG 30 சமூக சேவைகள் தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக செய்து வருகிறார்.

கொரோனா என்ற கொடிய நோய் ஏற்படும் போது அன்று முதல் இன்று வரை தொடர்ந்து தன்னால் முடிந்த அளவு சாலை ஓரங்களில் இருக்கக்கூடிய நபர்களுக்கு ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கி வருகிறார். மரக்கன்று நடுதல் காவல் துறை ஊர் காவல் படை பொதுமக்கள் ஆகியோருடன் சேர்ந்து தொடர்ந்து உதவி செய்து வருகிறார். ரத்த தானம் வழங்குதல் விலங்குகள் பறவைகளுக்கு உதவி செய்தல் விபத்துக்கள் ஏற்படும் போது அடிபட்டவர்களை மீட்டெடுத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்று மருத்துவர்களை அணுகி சிகிச்சை அளிக்க உதவி செய்து வருகிறார்.

மனநிலை பாதிக்கப்பட்டவர்களை மீட்டு எடுத்து அரசு காப்பகத்தில் ஒப்படைத்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார். உடல் தானம் உடல் உறுப்பு தானம் வழங்குவதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். பல்வேறு விழிப்புணர்வை தொடர்ந்து செய்து வருகிறார். மாணவ மாணவிகளுக்கு தன்னால் முடிந்த அளவு உதவி செய்து வருகிறார்.




