முதலைக்குளம் அருள்மிகு காமாட்சி அம்மன் கருப்பசாமி கோவிலுக்கு சொந்தமான சுமார் 1.5 கோடி மதிப்பிலான இடம் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் மீட்டனர் .
மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள முதலைக்குளம் கிராமத்தில் உள்ள அருள்மிகு காமாட்சி அம்மன் கருப்பசாமி திருக்கோயிலுக்கு சொந்தமான இடம் திருமங்கலம் நகர் சின்னகடை வீதியில் இருந்து வந்தது. இதன் மதிப்பு சுமார் 1.5 கோடி ஆகும். திண்டுக்கல் இணை ஆணையர் உத்தரவுப்படி பூட்டிய நிலையிலிருந்த 5 குடியிருப்புகள் 953 சதுர அடி இடம் கையப்படுத்தப்பட்டு தேனி உதவி ஆணையர்,
ஆலய நிலங்கள் வட்டாட்சியர், திருமங்கலம் சரக ஆய்வர், உசிலம்பட்டி சரக ஆய்வர், வருவாய் துறை மற்றும் காவல்துறை முன்னிலையில் மீட்கப்பட்டது. திருக்கோயில் தக்கார் திருக்கோயில் பணியாளர்கள் உடனிருந்தனர். உதவி ஆணையர் சுவாதீனம் எடுக்கப்பட்டது.
