வடமாடு மஞ்சுவிரட்டு நடத்துவதில் இரு தரப்பினர் இடையே தகராறு… மதுரை திண்டுக்கல் நான்கு வழி சாலையில் சாலை மறியல்
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே மஞ்சுவிரட்டு நடத்துவதில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினரை தாக்கியதால், ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்டவர்கள் மதுரை திண்டுக்கல் நான்கு வழி சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது .மதுரை மாவட்டம்,…
சுங்கச்சாவடி கட்டணம் உயர்வில்லை- தேசிய நெடுஞ்சாலை துறை அறிவிப்பு…
தமிழ்நாட்டில் இன்று முதல் 24-கு மேற்பட்ட சுங்கச்சாவடிகளுக்கு, சுங்கச்சாவடி கட்டண உயர்வானது இன்று காலை முதல் அமலுக்கு வருகிறது. கட்டண உயர்வு தற்போது, இருந்த கட்டணத்தை விட ஐந்து ரூபாய் முதல் 150 ரூபாய் வரை உயர்த்தப்படுவதாக தகவல் வெளிவந்துள்ளது.இந்த நிலையில்,…
2026 சட்டமன்ற தேர்தல் பணியை உடனே தொடங்க வேண்டும் – அமைச்சர் மூர்த்தி ஆலோசனை…
மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி பேரூர் மற்றும் வடக்கு ஒன்றிய தி.மு.க சார்பாக பொது உறுப்பினர்கள் கூட்டம் வாடிப்பட்டி ஜான்சி மகாலில் நடந்தது.இந்த கூட்டத்திற்கு, பேரூர் செயலாளர் மு. பால்பாண்டி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.,வெங்கடேசன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சேகர்,…
கரும்பாலை பகுதியில், சாலையில் கழிவுநீர்: நோய்கள் ஏற்படும் அபாயம்…
மதுரை கரும்பாலை மேல தெருவில் கழிவுநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையிலே பெருக்கெடுத்து ஓடுகிறது. மதுரை மாநகராட்சி சாத்தமங்கலம் கரும்பாலை மேலத் தெருவில், பல நாட்களாக சாலையில் செல்கின்ற கழிவுநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தெருவில் ஆறு போல பெருக்கெடுத்து…
மாவட்ட அளவிலான கல்விக்கடன் சிறப்பு முகாமில், மாணவ, மாணவியர்களுக்கு கல்விக் கடனுதவி
இவ்விழாவில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி பேசியதாவது:-ஒரு மனிதன் எத்தனை அதிகாரம் படைத்தவராக இருந்தாலும், எத்தனை செல்வம் படைத்தவராக இருந்தாலும் கல்வி கற்ற அறிஞருக்கு நேராக முடியாது. சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள எளிய மக்களை கல்வி ஒன்று தான்…
அலங்காநல்லூர், மாணிக்கம்பட்டி ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
மதுரை மாவட்டம் மதுரை அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றிய பகுதியில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.மாணிக்கம் பட்டி கிராமத்தில் நேற்று நடந்த மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாமை சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார். மேலும்…
வாடிப்பட்டியில் ஆரோக்கிய அன்னை திருத்தல ஆண்டுப் பெருவிழா
இந்தாண்டு திருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. கொடியேற்றத்தையொட்டி சிறப்பு திருப்பலி நடத்தி, கொடி மரத்திற்கு பூசை செய்து மதுரை மறை மாவட்ட பேராயர் அந்தோனிபாப்புசாமி திருவிழா கொடியேற்றி வைத்தார். அப்போது தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த…
மக்களுடன் முதல்வர் முகாம்.
சோழவந்தான் அருகே, இரும்பாடி ஊராட்சி பாலகிருஷ்ணாபுரத்தில் மக்களுடன் முதல்வர் முகாம் வெங்கடேசன் எம் எல் ஏ குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.சோழவந்தான் அருகே, இரும்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட பாலகிருஷ்ணாபுரத்தில்,உள்ள ஏசியன் தனியார் பள்ளியில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு,…
பல ஆண்டுகளுக்குப் பிறகு குருவித்துறை சித்திரை ரத வல்லப பெருமாள் கோவில் திருக்கல்யாணம் திருவிழா
சோழவந்தான் அருகே, குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோவில்மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாகும். இக்கோவில் தவக்கோளத்தில் குருபகவான் எழுந்தருளி ஒவ்வொரு குரு பெயர்ச்சிக்கும் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆவதால், இங்கு குரு பெயர்ச்சி விழா மிகச்…
அலங்காநல்லூர் பேரூராட்சியில் நகர்புற வேலை வாய்ப்பு திட்டத்தில் ஊதியம் குறைவாக வழங்குவதாக கூறி, பொதுமக்கள் போராட்டம்
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் பேரூராட்சியில், நகர்புற வேலைவாய்ப்பு திட்டத்தில் 100 நாள் வேலை பார்த்த விவசாய தொழிலாளர்களுக்கு சம்பளம் குறைவாக பேரூராட்சி நிர்வாகம் வழங்குவதாக கூறி, பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இது குறித்து பொதுமக்கள் கூறுகையில்.., அலங்காநல்லூர் பேரூராட்சியில்,…