இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளுக்கு இடையே வர்த்தகத்தை மேம்படுத்தும் விதமாக ஆஸ்திரேலிய வர்த்தக மற்றும் முதலீட்டு ஆணையத்தின் சார்பாக ஆஸ்திரேலிய திருவிழா கண்காட்சி கோவை அவினாசி சாலையில் உள்ள ரெசிடென்சி ஓட்டல் அரங்கில் நடைபெற்றது.

இதில்,ஆஸ்திரேலியாவில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்கள், பல்கலைகழகங்கள், உயர்தர உணவு மற்றும் குளிர்பான தயாரிப்பு நிறுவனங்கள் கலந்து கொண்டன..
கண்காட்சியில் கோவை மட்டுமின்றி அதன் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவர்கள்,வர்த்தகர்கள்,ஆலோசகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதில் கலந்து கொண்ட பார்வையாளர்கள் ஆஸ்திரேலிய நாட்டின் கல்வி மற்றும் தொழில் சார்ந்த பிரதிநிதிகளுடன் நேரடியாக கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
இது குறித்து, ஆஸ்திரேலிய வர்த்தக மற்றும் முதலீட்டு ஆணையத்தின் தலைவர் விக் சிங் கூறுகையில், ஆஸ்திரேலியாவின் கல்வி மற்றும் உணவு வகைகளில் சிறந்து விளங்கும் மூன்றாம் கட்ட ஆஸ்திரேலிய விழாவை கோவையில் நடத்துவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.

இந்த விழா இந்திய மாணவர்களுக்கு எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் கற்றல் வாய்ப்புகளை ஆராயவும், குடும்பங்கள் மற்றும் உணவு ஆர்வலர்களை ஆஸ்திரேலியாவின் பிரீமியம் தயாரிப்புகளுக்கு அறிமுகப்படுத்தவும் வாய்ப்பளிக்கிறது. உலகத் தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களையும் ஆஸ்திரேலிய உற்பத்திப் பொருட்களுக்கு அதிகரித்து வரும் விருப்பத்தையும் காட்சிப்படுத்துவதன் மூலம், இந்திய மாணவர்களுக்கும் நுகர்வோருக்கும் ஆஸ்திரேலியாவின் சிறப்பு மற்றும் புதுமையின் உண்மையான சுவையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.