• Wed. Dec 31st, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

10அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்புஆர்ப்பாட்டம்..,

ByT. Balasubramaniyam

Dec 31, 2025

அரியலூர் பழைய நகராட்சி அலுவலகம் முன்பு போட்டா-ஜியோ சார்பில் , 10அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்புஆர்ப்பாட்டம்நடைபெற்றது.தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாவட்ட தலைவர் அரங்க.கோபு தலைமையில் நடைபெற்ற கவன ஈர்ப்புஆர்ப்பாட்டத்தில்,தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணைத் தலைவர், அரியலூர் மாவட்ட செயலாளர் எழில் வரவேற்புரை ஆற்றினார்.

தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் – மாநில துணைத் தலைவர்ச.வேலுசாமி,தமிழ்நாடு மேல்நிலை ப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் – மாவட்டச்செயலாளர் க.கோவிந்த ராஜ், தமிழ்நாடு பட்டாரி ஆசிரியர் கழகம் – மாநில செயலாளர் ஜெ.சாமுவேல் , தொழிற்பயிற்சி அமைச்சு பணியாளர் சங்கம் – மண்டல தலைவர் அ.முருகராஜ், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டத் தலைவர் ஆ.சண்முகம் , தேசிய ஆசிரியர் கழகம் – மாவட்டத் தலைவர் பெ.ஆசைதம்பி,தமிழ்நாடு கிராம சுகாதாரசெவிலியர் நலச்சங்கம் மற்றும் சமுதாய செவிலியர் கூட்டமைப்பு -ப.எஸ்தர் ராஜகுமாரி, சத்துணவு ஊழியர் சங்கம் மாநில செயலாளர் ச.சங்கீதா உள்ளிட்டோர் கவன ஈர்ப்புஆர்ப்பாட்டத்திற்கு முன்னிலை வகித்தனர்.

மாநில அமைப்பின் சார்பில் சிறப்பு அழைப் பாளராக கலந்து கொண்ட தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில மகளிரணிச் செயலாளர்ஜெ.கல்பனாராய், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விளக்க உரை யாற்றினார்.தொடர்ந்துஆர்ப்பாட்டத்தில் 10 அம்ச கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனே நிறைவேற்றிட வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி – மாநில துணைத் தலைவர் (மகளிர்) இரா.அருமைக் கண்ணு , தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் அரியலூர் மாவட்ட பொருளாளர் ச. கோபி கிருஷ்ணன், கல்விதுறை அலுவலக பணியாளர் கள்சங்கம்க.மனோகரன், தமிழ்நாடு மேல்நிலை ப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம்மாவட்டதலைவர்கோ.ஆராவமுதன் , வேளாண்மை உதவி விதை அலுவலர் சங்கம் மு.கண்ணன், பட்டதாரி ஆசிரியர் கழகம்எஸ்.சுரேஷ்குமார், பொது நூலக த்துறை – மாவட்ட தலைவர் ந.செசிராபூ , தமிழ்நாடு நகராட்சி கூட்டமைப்பு சி.முருகேசன், கால்நடை பராமரிப்பு உதவியாளர் சங்கம் – மாநில துணை தலைவர்ந.மேகநாதன், தமிழ்நாடு பொ.ப.து (ம)நீ.ஆ.துஅமைச்சுப்பணியாளர் ஒன்றியம் – மாவட்ட தலைவர் அ.சரவணன் , நில அளவைத்துறை ஒன்றியம் – இரா.மணிகண்டன், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் – மாவட்டச் செயலாளர் எ.இராமதாஸ் , தமிழ்நாடு கல்வித்துறை அலுவலக பணி யாளர் சங்கம் – மாவட்டத்தலைவர் சு.மணிவண்ணன் , கால்நடைப ராமரிப்புத் துறை அமைச்சு பணியாளர் அலுவலர் சங்கம்மாவட்டத்தலைவர் தே.கல்விச் செல்வன், தமிழ்நாடு அரசுபொது நூலகத்துறைபிரச்சாரச் செயலாளர் கே.முருகன் , தமிழ் நாடுபொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத் துறை அமைச்சு பணியாளர் சங்கம் – மாவட்ட துணை தலைவர்மு.ஆனந்தன், மருத்துவ துறை அமைச்சு பணியாளர்கள் ஒன்றியம்மு.வினோத்குமார் அகில இந்திய மாநில அரசு நான்காம்
பிரிவு ஊழியர்கள் சம்மேளனம் – ஜி.ஆர்.மாரிமுத்து, அனைத்து அலுவலக கூட்டமைப்பு,செந்துறை .க.சிவபிரகாசம் , தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் நலச்சங்கம் மற்றும் சமுதாய செவிலியர் கூட்டமைப்பு கே.சந்ரா உள்ளிட்ட நிர்வாகிகள் பேசினர்.முடிவில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் புள்ளியல் துறை ப.இராஜா கூறினார்.