• Tue. Jan 13th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ஆட்சியர் அலுவலகத்தில் இளைஞர் தீக்குளிக்க முயற்சி

Byகுமார்

Jan 24, 2022

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இளைஞர் தீக்குளிக்க முயற்சி; போலீசார் விசாரணை.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த ஆனந்தன் என்கின்ற இளைஞர் குடும்ப பிரச்சனை குறித்து பலமுறை ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் மன விரக்தி அடைந்தவர் இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தனது குழந்தையுடன் வந்த அவர் திடீரென தன் கையில் வைத்திருந்த பெட்ரோல் கேனை எடுத்து தன் மீது ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்ந்து அவரை போலீசார் தடுத்து காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.