• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர் குடும்பத்தினர் மீது தாக்குதல்..!

Byவிஷா

Nov 11, 2023

தியேட்டரில் ‘ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்’ படம் பார்த்துக் கொண்டிருந்த போது ஏற்பட்ட தகராறில், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர் குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்திய 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ‘ஜிகர்தண்டா’ படம் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்றது. அதே கதைக்களத்துடன் தற்போது ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படம் வளியாகி உள்ளது. இதில், ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா, நிமிஷா சஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம், தேனாம்பேட்டை ஜி.என்.செட்டி சாலையில் உள்ள தியேட்டரில் வெளியாகி ஓடிக்கோண்டிருக்கிறது. இங்கு நேற்று இரவு காட்சியை காண தமிழக வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர்.ராமச்சந்திரனின் மகன், பேரன் உள்பட குடும்பத்தினர் வந்திருந்தனர்.
இரவு 10.50 மணிக்கு காட்சி தொடங்கியது. படம் ஓடிக் கொண்டிருந்த போது அவர்களுக்கு பின் இருக்கையில் அமர்ந்து இருந்த லாரன்ஸ் ரசிகர்கள் உள்பட பலர் அவ்வப்போது கூச்சலிட்டும் விசிலடித்தும் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்துக்கொண்டருந்தனர். இதனால், அதிருப்தியை அடைந்த அமைச்சர் குடும்பத்தினர், அவர்களை எச்சரித்துள்ளனர், மேலும், அமைதியாக இருங்கள் என்று கூறியிருக்கிறார்கள்.

இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஏற்பட்டுள்ளது.  இதில்,  அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் மகன் ரமேஷ் (50) பேரன் கதிர் ஆகியோர் தாக்கப்பட்னர்.. இதனால் கதிருக்கு ரத்த காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து அறிந்த  தியேட்டர் நிர்வாகத்தினர், விரைந்து வந்து அவர்களை சமாதானப்படுத்தி இருக்கிறார்கள். அந்த தருணத்தை பயன்படுத்தி அவர்கள் 6 பேரும் தியேட்டரில் இருந்து தப்பி சென்றுவிட்டார்கள்.
இதுகுறித்து புகார் அளித்த அமைச்சர் குடும்பத்தினர்,  காயம் அடைந்த கதிரை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.
இது தொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அமைச்சர் குடும்பத்தினரை தாக்கிய  6 பேரையும் தேடி வருகிறார்கள்.