நாமக்கல் மாவட்டம், வேலூரிலிருந்து கரூருக்கு அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்தில் பயணம் செய்த போதை இளைஞர் ஒருவர் பேருந்தின் கடைசி இருக்கையில் அமர்ந்து பயணம் செய்த இளைஞர் பேருந்தின் ஜன்னல் கண்ணாடியை திறக்க முடியாததால் ரிப்பேராக இருப்பது குறித்து தொடர்பாக ஓட்டுனரிடம் கேட்டுள்ளதாகவும், இது தொடர்பாக இருவருக்ரும் வாக்குவாதம் நடந்ததாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் போதை இளைஞரின் நடவடிக்கையால் சகபயணிகளும் பாதிக்கப்படுவதால் பேருந்தை கரூர் நகர காவல் நிலையத்திற்கு ஓட்டி வந்தனர். காவல் நிலையத்தில் பணியில் இருந்த காவலரிடம் நடந்த விஷயத்தை சொல்லி இளைஞரை வெளியேற்றுப்படி கூறினர். அப்போது, செய்தியாளர்கள் வீடியோ எடுப்பதை பார்த்த காவலர் ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் அவரை அழைத்துச் செல்லும்படி அறிவுறுத்தி பேருந்தை அனுப்பி வைத்தனர். இதனால் பெண் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.