நாகர்கோயில் மாநகராட்சி 42 வது வார்டு வட்டச் செயலாளரும், குமரி மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் பிரபா ஜி.ராமகிருஷ்ணன் இல்லத்தில் வைத்து நகரச் செயலாளர் ஆனந்த் தலைமையில் செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.
இதில் மாநகர அவைத்தலைவர் பன்னீர் செல்வம், கிழக்கு மண்டல செயலாளர் துரை, 42வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஸ்டாலின் பிரகாஷ், வட்ட பிரதிநிதிகள் தர்மராஜ், மால்டன் ஜினின், வார்டு செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


நிகழ்வில் பேசிய அனைவருமே,2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக 200_அதிகமான இடங்களில் வெற்றியை ஈட்டுவதுடன், கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் திமுகவினர் கூடுதல் பொருப்பு டன் தேர்தலில் பணியாற்றி கூட்டணி கட்சியின் வெற்றிக்கு அழைக்கவேண்டும் என்ற கருத்தை தெரிவித்தார்கள்.
