குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.தங்கமணி 10 லட்சம் மதிப்பீட்டில் பள்ளிக்கு தேவையான உபகரணங்களை வழங்கி சிறப்பித்தார். பள்ளி மாணவ, மாணவிகள் மகிழ்ந்தனர்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு திட்ட நிதியில் ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில் பள்ளிக்குத் தேவையான 65 செட் டெக்ஸ்ட் பெஞ்ச் வழங்கும் விழா இன்று நடைபெற்றது.

விழாவிற்கு குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.தங்கமணி கலந்து கொண்டு பள்ளிக்குத் தேவையான உபகரணங்களை வழங்கி சிறப்பித்தார்.


இந்நிகழ்ச்சியில் பள்ளிபாளையம் அதிமுக நகர செயலாளர் வெள்ளிங்கிரி, தெற்கு ஒன்றிய செயலாளர் செந்தில், வடக்கு ஒன்றிய செயலாளர் குமரேசன், அம்மா பேரவை செயலாளர் டி .கே. சுப்பிரமணி, அதிமுக ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள், அதிமுக நகர மன்ற உறுப்பினர்கள், தகவல் தொழில்நுட்ப அணி தலைவர் சரவணன் மற்றும் பள்ளி ஆசிரியர் பெருமக்கள் பங்கேற்றனர்.
