திண்டுக்கல் ஜி டி என் செவிலியர் கல்லூரி மைதானத்தில் தமிழ்நாடு பயிற்சி பெற்ற செவிலியர் சங்க தமிழ்நாடு கிளை சார்பாக ஆசியா மற்றும் இந்திய புத்தக உலகசாதனை நிகழ்வு நடைபெற்றது.

தமிழ்நாடு முழுவதும் இருந்து 176 செவிலியர் கல்லூரிகளில் இருநது 3256 மாணவ மாணவிகள் மனித வடிவில் தமிழ்நாடு பயிற்சி பெற்ற செவிலியர் சங்க தமிழ்நாடு கிளை இலட்சினை உருவாக்கம் செய்து உலக சாதனை படைத்துள்ளனர்.
நிகழ்ச்சியில் சங்க தலைவர் ஆனி கிரேஸ் கலைமதி தலைமையில் சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி இயக்குனர் துரை ரத்தினம் முன்னிலை வைத்தார். ஆசிய மற்றும் இந்திய சாதனை புத்தக பொறுப்பாளர் விவேக் சாதனை நிகழ்ச்சியை பார்வையிட்டு சாதனை புத்தகத்தை கையெழுத்திட்டு வழங்கினார்.
நிகழ்ச்சியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு மூவர்ண கலரில் பலூன்கள் பறக்க விடப்பட்டன.

சங்க ஆலோசகர் சுதா, துணைத் தலைவர் உதயகுமார், செயலாளர் விஜயலட்சுமி, சங்க நிர்வாகிகள் மற்றும் கல்லூரி நிர்வாகிகள் சாதனை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.
ஜி டி என் நர்சிங் கல்லூரி முதல்வர் வசந்தாமணி, பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், செவிலியர் கல்லூரி மாணவ மாணவிகள் உள்ளிட்ட பலர் சாதனை நிகழ்ச்சி கண்டுகளித்தனர்.








