• Tue. Jun 25th, 2024

அன்னையர் தினத்தை முன்னிட்டு அஸ்வின்ஸ் நிறுவனம் வாடிக்கையாளர், பொதுமக்களுக்கு மரக்கன்றுகள்

Byதி.ஜீவா

May 13, 2024

பெரம்பலூரை தலைமை இடமாகக் கொண்டு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சிறப்பாக செயல்பட்டு வரும் அஸ்வின்ஸ் நிறுவனம், அன்னையர் தினத்தையொட்டி அனைத்து கிளைகளிலும் வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

நாடு முழுவதும் மே 12-ந்தேதி அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த நன்னாளில் தங்களது  அன்னையர்களுக்கு, உறவினர்களுக்கும் வாழ்த்து தெரிவிப்பதும், பரிசு வழங்குவதும் வழக்கம். ஆனால் அஸ்வின்ஸ் நிறுவனம் புதிய முழக்கத்துடன் புதிய முயற்சியை எடுத்துள்ளது. 

நம் அன்னைக்கு மட்டுமல்ல, பசுமை பூமியை நமக்கு தந்த நம் “இயற்கை அன்னைக்கும்” நன்றியினை அளிப்போம் என்ற முழக்கத்துடன் அஸ்வின்ஸ் நிறுவனம், தங்களது 38-கிளைகளிலும் இன்று வாடிக்கையாளர்களுக்கு அஸ்வின்ஸ் பணியாளர்கள், மரக்கன்றுகளை வழங்கி, வாழ்த்து தெரிவித்தனர். இது குறித்து அஸ்வின்ஸ் இனை இயக்குனர் செல்வக்குமாரி கணேசன் கூறும் போது, பல்வேறு காரணங்களுக்காக மரங்கள் வெட்டப்படுவதால், பூமி என்னும் இயற்கை தாய் வெப்பமடைந்து, மழையின் அளவும் குறைந்து வருகின்றது. இந்த அன்னையர் தினத்தில் நம் அன்னையர்களை மதிப்பதோடு மட்டுமில்லாமல், இயற்கை அன்னையையும் வணங்கி நன்றி சொல்ல வேண்டும் என்றார். அந்த நன்றி மரங்களை நட்டு, பூமி வெப்பமடைவதிலிருந்து காப்பதே, பூமித்தாய்க்கு நாம் செய்யும் உண்மையான நன்றி என்று கூறிய அவர், ஒவ்வொரு மனிதர்களும் தங்களது வாழ்நாளில் குறைந்தது, நான்கு மரக்கன்றுகளை நட்டு பராமரித்து பாதுகாக்க வேண்டும் என்றார். மேலும் இயற்கை அன்னைக்கு நன்றி கூறும் விதமாக, எங்களது அஸ்வின்ஸ் நிறுவனத்தின் சார்பில், முடிந்தவரை மரக்கன்று வழங்குவது, மரங்களை நடுவது என உறுதியேற்றுள்ளோம். அதேபோல் வாடிக்கையாளர்களும் பொதுமக்களும் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க பாதுகாக்க வேண்டுமென உறுதியேற்க வேண்டுமென கேட்டுக்கொண்டு, அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். அன்னையர் தினத்தையொட்டி அஸ்வின்ஸ் நிறுவனத்தின் அனைத்து கிளைகளிலும் மரக்கன்றுகள் வழங்கியது வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. முன்னதாக அன்னையர் தினத்தையொட்டி அஸ்வின்ஸ் நிறுவனத்தின் சார்பில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கற்பகம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவி ஆகியோர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *