• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பெற்றோரை இழந்த பெண்ணிற்கு திருமண உதவியாக..,காங்கிரஸ் கட்சி சார்பில் 50ஆயிரம் ரூபாய் நிதி உதவி..!

குமரி மாவட்டத்தில், தாய், தந்தையை இழந்த பெண்ணிற்கு திருமண உதவியாக காங்கிரஸ் கட்சி சார்பில் 50 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கப்பட்டது.
குமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதிக்கு உட்பட்ட திக்குறிச்சி பகுதியில் தாய், தந்தையை இழந்த இளம் பெண் அஜிஷா – வுக்கு அப்பகுதியை சேர்ந்த காங்கிரஸ் சேவாதள வட்டார தலைவர் சதீஷ் அவரது தம்பி ஷாஜி ஆகியோர் இணைந்து எதிர் வரும் (டிசம்பர்-14)ம் தேதி திருமணம் நடக்க இருக்கையில் மணப்பெண் அஜிஷா லுக்கு திருமண செலவிற்கு ரூ.50 ஆயிரத்தை உதவி தொகையாக, கன்னியாகுமரி மக்களவை காங்கிரஸ் உறுப்பினர் விஜய் வசந்த் மூலம் கொடுத்து மகிழ்ச்சி அடைந்தனர்.
புதுமணப் பெண் அஜிஷா – வுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் திருமண உதவி செய்த செய்தி திக்குறிச்சையை கடந்து குமரி மாவட்ட மக்களின் பாராட்டை பெற்றுள்ளது.