புதுக்கோட்டை மாவட்ட செனையக்குடி கத்தாழம்பட்டி பெரண்டயாப்பட்டி மற்றும் இந்த மூன்று கிராமத்திற்கு பல வருடங்களாக இந்த கிராமங்களில் உப்பு நீரானது குடிக்கப்பட்டு இருந்தது தற்போது இந்த மூன்று கிராம மக்களுக்கும் பயன்பாட்டிற்காக சிஎஸ்கே குளோபல் பவுண்டேஷன் நிறுவனத்தினால் ஆர்வோ சுத்திகரிப்பு நிலையம் திறப்பு விழா மற்றும் பழ மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

இவ்விழாவில் புதுக்கோட்டை சி எஸ் கே குளோபல் நிறுவன தலைவர் சித்திரைச் செல்வன் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை திமுக வடக்கு மாவட்ட செயலாளர் கே கே செல்லபாண்டியன் மற்றும் சி எஸ் கே குளோபல் பவுண்டேஷன் நிறுவன உறுப்பினர்கள் மற்றும் செனையக்குடி கத்தலாம்பட்டி பெரண்டயாமப்பட்டி ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் கலந்து கொண்டு மக்கள் பயன்பாட்டிற்கு ஆர்வ சுத்திகரிப்பு நிலையம் திறந்து வைத்தனர். இந்த நாள் இந்த மூன்று கிராமங்களில் 800 குடும்பங்களில் உள்ள பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஆர்வம் சுத்திகரிப்பு குடிநீர் குழாய் திறந்து வைத்தனர்.
