டெல்லியில் உள்ள கோகுல்புரி பகுதியில் கடந்த சனிக்கிழமை அதிகாலை 1 மணியளவில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் ஏராளமான குடிசைகள் மளமளவென பற்றி எரிந்தன.
இந்த கொடூரமான தீ விபத்தில் 7 பேர் பலியாகினர். சம்பவ இடத்தை சம்பவ இடத்தை ஆய்வு செய்த டெல்லி மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.இந்த துயர சம்பவம் கேட்டு மிகவும் வருத்தம் அடைவதாகவும் இறந்தவர்களின் ஆன்மாக்கள் இறைவனடி சேர வேண்டிக் கொள்வதாகவும் கூறினார். இந்த தீ விபத்தில் பலியான பெரியவர்களுக்கு தலா 10 லட்சம் ரூபாயும், குழந்தைகளுக்கு ஐந்து லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக வழங்கப்படும் என அறிவித்தார். அதோடு தீ விபத்தில் எரிந்து சாம்பலாகிய குடிசைகளுக்கு 25 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் எனவும் அறிவித்தார்.













; ?>)
; ?>)
; ?>)