கலைஞர் கருணாநிதி என்னும் பெயர் தமிழகத்தில் நூறு ஆண்டுகளாக உச்சரிக்கப்படும் தவிர்க்க முடியாத ஒரு பெயர்.
திருவாரூரில் பிறந்த கலைஞர் பள்ளி பருவத்திலே தமிழ் பற்று மிக்க மாணவராக திகழ்ந்துள்ளார். அவரது 14_வது வயதிலே தமிழ் கொடி பிடித்து திருவாரூர் சாலையில் ஊர்வலமாக சென்றது. இளம் பருவத்திலே கலைஞரின் தமிழ் மொழியின் மீது இருந்த உன்னதத்தை உணர்த்தியது.
தந்தை பெரியார், பேரரிஞர் அண்ணாவிடமும் உன்னத பற்றை கொண்டிருந்தார்.

தி க வில் உறுப்பினராக இருந்த கலைஞர். அண்ணா எடுத்த அரசியல் முடிவை அடுத்து அண்ணாவழியில் தி மு க வில் பயணித்தார். எழுத்தாற்றால்,பேச்சாற்றல் மிக்கவர் என்பதை கடந்து நல்ல நினைவாற்றல் மிக்கவராகவும் கலைஞர் திகழ்ந்தார்.
கருணாநிதியின் கதை வசனத்தில் வெளியான பராசக்தி திரைப்படத்தில் புதுமுகமாக அறிமுகமானவர் தான் அன்றைய வி. சி. கணேசன் என்ற சிவாஜி கணேசன்.
தி மு க 1957_ல் முதல் முதலாக தேர்தல் களத்தில் இறங்கிய போது, குளித்தலை சட்டமன்ற தொகுதியில் முதல் முதலாக தி மு க சார்பில் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று புனித ஜார்ஜ் கோட்டையினுள் அடி எடுத்து வைத்த கலைஞர் கருணாநிதி அவர் போட்டியிட்ட அனைத்து சட்ட மன்ற தேர்தல்களிலும் வெற்றி பெற்றார். ஒரு முறை அன்றைய மேலவை உறுப்பினராகவும் இருந்தார்.


இலங்கையில் தமிழர்களுக்கு சிங்கள பேரினவாத அரசால் ஏற்படுத்தப்பட்ட இன்னல் கண்டு அதனை தமிழகத்தின் சார்பில் கண்டித்து கலைஞரும், பேராசிரியர் அன்பழகனும் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்கள்.
டால்மியபுரம் என்ற பெயரை கல்லக்குடி என போராட்டத்தின் பாதையில். ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து போராட்டம் நடத்தியது. சென்னை_திருச்சந்தூர் கண்டன நடைபயணம். இவரது ஆட்சியில் மக்கள் நல கட்டங்களாக.

மனிதனை மனிதன் இழுக்கும் கை ரிக்சா ஒழிப்பு, குடிசை இல்லா சென்னை என குடிசை மாற்று வாரியம். இலவச கண் ஒளி சிகிச்சை.என்ற வரலாறு சிறப்பு மிக்க சட்டங்களை கொண்டு வந்தார்.
கலைஞர் கருணாநிதி மறைந்த 6_ ஆண்டு நினைவு தினமான இன்று தமிழகத்தில், கன்னியாகுமரி முதல் சென்னை வரை மாவட்ட தலை நகர்களில் அமைதி ஊர்வலம். ஒவ்வொரு ஊரிலும் மக்கள் கூடும் சந்திப்பு பகுதிகளில் இன்று முழுவதும். கலைஞர் கருணாநிதி படத்தை அலங்கரித்து மலர் தூவுவது என்ற அடிப்படையில், கன்னியாகுமரி ரவுண்டானா பகுதியில் அண்ணா சிலை அருகே, அலங்கரிக்கப்பட்ட கலைஞர் கருணாநிதியின் உருவ படத்திற்கு அகஸ்தீஸ்வரம் ஒன்றிய செயலாளர் பாபு, கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் சிறப்பு நிலை பேரூராட்சி தி மு க. கவுன்சிலர்கள்,கூட்டணி கட்சியினர் ஆட்டோ சங்க உறுப்பினர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

குமரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில். வடசேரி அண்ணாசிலையின் அருகில் இருந்து குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயரும் ஆன மகேஷ் தலைமையில் தி மு கவின் மகளிர் பிரிவு, இளைஞர் அணி, தொழிற்சங்கங்கள் கட்சியின் பல்வேறு பொருப்பாளர்கள்.1000_க்கும் அதிகமான திமுகவினர் பங்கேற்ற அமைதி ஊர்வலம். மணிமேடை, வேப்பமூடு, மீனாட்சிபுரம் வழியாக திமுக அலுவலகம் வந்தனர்.
மேயர் மகேஷ் உட்பட பலரும் கருப்பு சட்டை அணிந்து ஊர்வலத்தில் பங்கேற்றனர். நிறைவாக கட்சி அலுவலகம் வளாகத்தில் உள்ள கலைஞர் கருணாநிதியின் சிலைக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். நிறைவாக கட்சியினரின் மத்தியில் பேசிய கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மகேஷ் கட்சியினர் ஒன்றித்து உழைத்து ஒற்றுமையாக செயல் படுவோம் என நம் தலைவர் கலைஞர் பெயரால் உறுதி எடுத்துக்கொள்வோம் என்றார்.
