சபரிமலையில் சன்னதி முன்பு உள்ள துவார பாலகர் சிலையில் உள்ள தங்க தகடுகள் பழுதானதைத் தொடர்ந்து கடந்த 2019 ல் அதை புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டது.
அப்போது பாலக்காட்டை சேர்ந்த உன்னிகிருஷ்ணன் போற்றி என்பவர் நானே நன்கொடையாக இதை புதுப்பித்து தருகிறேன் என்று சொல்லி தங்க தகடுகளை எடுத்துச் சென்றார்.

புதுப்பிக்கப்பட்ட தங்கத்தகட்டில் அரை கிலோ தங்கம் குறைவாக இருந்தது. பின்னர் தெரிய வந்தது.
இது தொடர்பாக உன்னிகிருஷ்ணன் போற்றி உள்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் சிறப்பு புலனாய்வு குழுவினர் இன்று அதிகாலை உன்னிகிருஷ்ணன் போற்றியை கைது செய்தனர்.