அரியலுார் .இந்திய பள்ளி விளையாட்டு குழுமத்தால் நடத்தப்படும் 2025 26ஆம் கல்வியாண்டு அகில இந்திய பள்ளி விளையாட்டு குழுமம் நடத்தும் தடகளப் போட்டிகள் 13 12 2025 முதல் 17 12 2025 வரை உத்திர பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் நடைபெற்று வருகிறது.

அதில் அரியலூர்அரசு .மேல்நிலைப் பள்ளி அரியலூர் விளையாட்டு விடுதி மாணவன் எல் .யோபின் 12 ஆவது சி பிரிவு மாணவன் நீளம் தாண்டுதல் போட்டியில் 6.96 மீட்டர் தாண்டி முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் தட்டி சென்றார். இதனை தொடர்ந்து,
மாணவன்எல் .யோபினுக்கு , பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் ,பள்ளி மேலாண்மைக்குழுவினர் , மற்றும் பொதுமக்கள் சார்பில் பாராட்டுகள் குவிந்து வண்ணம் உள்ளது.





