
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கவண்டம்பட்டி ரோட்டில், வயது முதிர்ந்து ஆதரவற்று கிடந்த மூதாட்டியை உசிலம்பட்டி நகர அரிமா சங்கத்தினர் மீட்டு, உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வருகிறார்.
அரிமா சங்க தலைவர் பத்மநாபன் தலைமையில் 108 ஆம்புலன்ஸ் உடன் விரைந்து சென்று அந்த பாட்டியை மீட்டு, உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விசாரணையில் அந்த மூதாட்டி உசிலம்பட்டி வைரவன் கோவில் தெருவை சேர்ந்த பாண்டி என்பவரது அம்மா என தெரிய வந்தது பாண்டி சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டதால் ஆதரவற்று மனநலம் சிறிது பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
