• Thu. Jan 22nd, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

திருப்பூரில் அதிமுக உட்கட்சி தேர்தலில் கட்சியினருக்குள் வாக்குவாதம்

திருப்பூரில் அதிமுக கட்சி நிர்வாகிகளுக்கான அதிமுக உட்கட்சி தேர்தல் நடந்த போது பொள்ளாச்சி ஜெயராமன் முன்னிலையில் அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர் மாவட்டத்தில் 2000க்கும் மேற்பட்ட கிளை கட்சி நிர்வாகிகளுக்கான தேர்தல் அந்தந்த பகுதிகளில் உள்ள அதிமுக கட்சி அலுவலகங்களில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு கிளை கழகத்திலும் தலைவர், செயலாளர் என 9 பதவிகளுக்கு நிர்வாகிகள் தேர்தடுக்கப்படுகின்றனர்.

திருப்பூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தும் பணிகளை நீலகிரி மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் நடத்தி வருகிறார். பொள்ளாச்சி ஜெயராமன், தேர்தல் பணிகளை பார்வையிட்டு வருகிறார். தெற்கு தொகுதிக்கான தேர்தல் காங்கேயம் சாலை அதிமுக அலுவலகத்தில் நடந்தது.

அப்போது புதிய நிர்வாகிகளுக்கு விண்ணப்பம் படிவம் வழங்கவில்லை என்றும் , ஏற்கனவே நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு சம்பிரதாயத்திற்காக தேர்தல் நடத்தப்படுவதாகவும் பொள்ளாச்சி ஜெயராமன் முன்னிலையில் அதிமுக வினர் கூச்சலிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பிறகு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது.