• Sat. Oct 4th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

அடியாட்கள் மூலம் நிலத்தை கையகப்படுத்த முயல்வதாக நில அளவையருடன் வாக்குவாதம்

ByKalamegam Viswanathan

Jun 9, 2023

நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் அதிகாரத்தை பயன்படுத்தி நிலத்தை அடியாட்கள் மூலம் கையகப்படுத்த முயல்வதாக குற்றம் சாட்டி வாக்குவாத்தில் ஈடுபட்ட சம்பவம் மதுரை திருமங்கலம் அருகே பரபரப்பை ஏற்படுத்தியது.
காலம் காலமாக காத்து வந்த ஐந்தரை ஏக்கர் நிலத்தை அதிகாரத்தை பயன்படுத்தி அடியாட்கள் மூலம் கையகப் படுத்த முயன்ற நில அளவையருடன் வாக்குவாதத்தை ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் நிலத்தை கையகப்படுத்த முயல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆஸ்டின்பட்டி போலீசார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கரடிக்கல்லில் இருந்து எய்ம்ஸ் மருத்துவமனைக்கு செல்லக்கூடிய சாலை அருகில் அரசுக்கு சொந்தமான 5.50 ஏக்கர் நிலம் இருந்த நிலையில் இதனை கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் கரடிக்கல் பகுதியைச் சேர்ந்த வேலு என்பவர் நிலத்தை பராமரித்து வந்துள்ளார் இந்த நிலையில் 5 ஏக்கர் நிலத்தை பராமரித்த வேலு 1.63 ஏக்கர் நிலத்திற்கு தெண்டந்தீர்வை வரி செலுத்தி நிலத்தை பராமரித்து வந்த நிலையில் வேலு அவருக்கு பின்னால் வந்த வாரிசுகளுக்கு இந்த நிலத்தை எழுதிக் கொடுத்தார்.
தற்போது வேலுவின் மகன் கரிகால சுந்தன் மனைவி சிவனம்மாள் மற்றும் அவரது பிள்ளைகளான வடமலை அமாவாசை ஆகியோர் பராமரித்து வந்த நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு அரசுக்கு சொந்தமானதாக சொல்லப்படும் 5.50 சென்ட் நிலம் தங்களது சொந்தமானது எனவும் இந்த இடத்தை தனது தந்தை வாங்கி இப்போதே எனது பெயரில் மாற்றியுள்ளார் எனவும்.
மதுரை மாவட்ட சார்பதிவாளர் சீனிவாசன் என்பவர் இடத்தை கைப்பற்றி வேலி போட முயன்றதாக சொல்லப்படுகிறது இதற்கு சிவனம்மாள் வடமலை அமாவாசையாக எதிர்ப்பு தெரிவித்து தங்களுக்கு சொந்தமான 1.63 ஏக்கர் நிலத்தை விட்டு விட்டு மற்ற நலத்தை வைத்துக் கொள்ளுங்கள் என கூறியதாக சொல்லப்படுகிறது.
அதற்கு ஒப்புக் கொள்ளாத மாவட்ட பதிவாளர் சீனிவாசன் நிலத்தை முழுவதும் கைய படுத்த முயன்றதால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது இந்த விவகாரம் மாவட்ட நீதிமன்றத்திற்கு சென்ற நிலையில் 1.63 ஏக்கர் நிலம் சிவனம்மாள் குடும்பத்திற்கு சொந்தமானது என தீர்ப்பு வந்தது இதனை ஏற்றுக் கொள்ளாத சீனிவாசன் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்தார் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் வழக்கு நடைபெற்று வந்த நிலையில் நாளை இறுதி கட்ட விசாரணை நடத்தப்படுகிறது.
இந்த நிலையில் சீனிவாசன் இன்று அடியாட்கள் உடன் வந்து சம்பந்தப்பட்ட இடம் முழுவதையும் வேலை அமைக்க முற்பட்டபோது சிவனம்மாள் குடும்பத்தினர் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தை ஈடுபட்டனர் மேலும் இந்த விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கலையை அணுகி உடனடியாக தடை ஆணை பெற்று வந்து காண்பித்தனர். இதை ஏற்றுக் கொள்ளாத மாவட்ட பதிவாளர் சீனிவாசன் ஆட்கள் அவர்களை தாக்க முற்பட்டுள்ளனர் இதனால் சம்பவம் குறித்து ஆஸ்டின் பட்டி போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
தகவல் வந்த போலீசார் தடையானை பெற்றிருப்பதை எடுத்துக் கூறி இருவரையும் கலந்து போக செய்தனர் நாளை இறுதி கட்ட விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில் மாவட்ட பதிவாளர் சீனிவாசன் தனது அதிகாரத்தை பயன்படுத்தி தங்களது நிலத்தை கையக படுத்த முயற்சிப்பதாக சிவனம்மாள் குடும்பத்தினர் தெரிவித்தனர். இந்த நிலையில் பிரச்சினைக்குரிய 5.50 சென்ட் நிலம் இருக்கும் இடத்துக்கு அருகாமையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய இருப்பதால் இடத்தின் மதிப்பு உயரம் என்பதாலேயே இந்த விவகாரம் பூதாகரமாக மாறி உள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.