வக்கம் பட்டியில் கோவில் திருவிழாவில் இடப் பிரச்சினை காரணமாக இருதரப்பினர் இடையே வாக்குவாதம் போலீசாருக்கும் பொது மக்களுக்கும் தள்ளுமுள்ளு, சாலை மறியலில் ஈடுபட்டவர்களை தூக்கிச் சென்று அப்புறப்படுத்தியதில் ஒருவர் சாலையிலேயே மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே வக்கம்பட்டியில் காளியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இன்று இந்த கோவிலின் சப்பர பவனியின் போது சப்பரத்தை கிறிஸ்தவ தேவாலயத்தின் முன்பாக கொண்டு வந்ததாக கூறப்படுகிறது இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிறிஸ்தவர்களுக்கும் இந்துக்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த தாலுகா காவல் நிலைய போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதில் ஒரு தரப்பினர் மறியலில் அமர்ந்தனர். இதனால் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுக்கும் போலீசாருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் மறியயில் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி அப்புறப்படுத்த முயன்றனர். இதில் ஒருவர் சுயநினைவு இழந்து மயக்கம் அடைந்து சாலையில் விழுந்தார். அவரை திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். தொடர்ந்து இருதரப்பினருடைய போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
மேலும் காளியம்மன் கோவில் முன்பாக 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அமர்ந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.