

சென்னை ரயில்வே வாரிய தேர்வுக்கு மையங்களாக ஜம்மு-காஷ்மீர், அலகாபாத், மைசூருவில் இடம் ஒதுக்கப்பட்டள்ளது. இதனை ரத்து செய்து சென்னை ரயில்வே வாரிய தேர்வினை தமிழகத்திலேய நடத்த வேண்டும் என சு. வெங்கடேசன் எம்.பி., வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் : ஆர்ஆர்பி சென்னை, 601 ரயில் நிலைய அதிகாரி காலி யிடங்களுக்கு 2020 டிசம்பருக்கும் 2021 ஜூலைக்கும் இடையே முதல் நிலைத் தேர்வு நடத்தியது. இந்த முதல்நிலை தேர்வு தமிழகத்தி லேயே உள்ள நகரங்களில் நடத் தப்பட்டது. இதற்கான முடிவுகள் மார்ச் 22-க்கும் ஏப்ரல் 22-க்கும்இடையே வெளியிடப்பட்டன. தேர்வானவர்களுக்கு இரண்டாம் நிலை தேர்வு நடத்தப்பட வேண் டும். இந்த தேர்வு தெற்கு ரயில்வே யில் சென்னை ஆர்ஆர்பி-க்கு விண்ணப்பித்தவர்களுக்கு தமிழ கத்திலேயே தேர்வு மையங்கள் வைப்பதுதான் நியாயமானதும் வசதியானதுமாகும்.
ஆனால் ஜம்மு-காஷ்மீரில் உள்ள சம்பா விலும் அலகாபாத்திலும் மைசூரு, உடுப்பி, சிமோகாவிலும் தேர்வு மையங்கள் வைக்கப்பட்டுள் ளன. மே 9 ஆம் தேதி தேர்வு நிச்ச யிக்கப்பட்டுள்ளது. சிஇஎன்1/ 2019 என்ற விளம்ப ரத்தின் அடிப்படையில் விண்ணப் பித்த இந்த தேர்வர்களுக்கு இப் படி வெளிமாநிலங்களில் மையங் களை ஏற்படுத்துவது வேற்று மொழி பேசும் இடங்களில் தமிழக விண்ணப்பதாரர்கள் திணற வைப்பதற்கு வழிவகுக்கும். மாற்றுத்திறனாளியான ஒரு விண் ணப்பதாரருக்கு அலகாபாத் மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள் ளது. இது அனைத்தும் ஜன நாயக பூர்வமற்றது மட்டுமல்ல, நியாயமானதும் இல்லை. தேர் வர்களுக்கு எதிரான புறக்காரணி யாக தேர்வுநடைமுறைகள் அமையக்கூடாது. இதுகுறித்து சென்னை ஆர்ஆர்பி தலைவர் அழகர்ஜெக தீசனுக்கு கடிதம் எழுதியுள்ளேன். அவரை இதில் தலையிட்டு இந்த விண்ணப்பதாரர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு எழுத அனுமதிக்குமாறும் ஏற்பாடு செய் யுமாறும் கேட்டுக் கொண்டுள் ளேன். இவ்வாறு அதில் தெரிவித் துள்ளார்.
