• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

கட்டிடக் கலைநிபுணரை மிரட்டி பலாத்காரம்..,

BySeenu

Jul 4, 2025

கோவையை சேர்ந்தவர் 23 – வயது இளம்பெண். கட்டிடக் கலை நிபுணர். இவர் கடந்த ஆண்டு கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரில், வடவள்ளி பகுதியை சேர்ந்த பிசியோதெரபிஸ்ட் அனந்த கிருஷ்ணன் (68) என்பவர் வீடு கட்டி வந்தார். அந்த வீட்டுக்கு அந்தப் பெண் கட்டிடக் கலை நிபுணராக பணியாற்றி வந்ததாகவும், அப்போது அவர் அந்தப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். எனவே அவர் சட்ட உதவியை நாடி ஆடிஸ் வீதியில் உள்ள வழக்கறிஞர் மனோஜ் பாண்டி (32) என்பவரை அணுகி உள்ளார். அதன் பின்னர் மனோஜ் பாண்டி மற்றும் அனந்த கிருஷ்ணன் இருவரும் அந்தப் பெண்ணின் ஆபாச வீடியோ அவர்களிடம் உள்ளதாக கூறி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தனர். இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று புகாரில் தெரிவித்தார்.

அதன்படி அப்போதைய மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் இந்த வழக்கை விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதன் பின்னர் பிசியோதெரபிஸ்ட் ஆனந்த கிருஷ்ணன் மற்றும் வழக்கறிஞர் மனோஜ் பாண்டி இருவரும் கைது செய்யப்பட்டனர்.

பின்னரும் இருவரும் ஜாமினில் வெளி வந்தனர். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் மனோஜ் பாண்டி கடந்த மாதம் 23 ம் தேதியில் இருந்து ஓராண்டு வழக்கறிஞராக பணி தொடர தடை விதித்து உள்ளது.