• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

அப்பு எக்ஸ்பிரஸ் ஆம்புலன்ஸ் வழங்கியபிரகாஷ்ராஜ் !

மறைந்த கன்னட நடிகர் புனித்ராஜ்குமார் நினைவாக ஏழைகளுக்காக சேவை செய்துவரும் மருத்துவமனை ஒன்றுக்கு ஆம்புலன்ஸ் ஒன்றை நன்கொடையாக வழங்கினார் நடிகர் பிரகாஷ்ராஜ்.கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர்புனித் ராஜ்குமார். இவர், புகழ்பெற்ற கன்னட சூப்பர்ஸ்டார் ராஜ்குமாரின் இளையமகன் 2021 அக்டோபர் மாதம் மாரடைப்பால் திடீர் என்று காலமானார் புனித் ராஜ்குமார் அவரது மறைவு இந்திய சினிமாவை உலுக்கியது.
அவர் இறுதியாக நடித்த கன்னட படமான ‘ஜேம்ஸ்’ திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்கள் கண்ணீர்மல்க அவரது இறுதிப்படத்தை பார்த்தனர்.
நடிகர் மட்டுமல்லாமல், பாடகர்,தயாரிப்பாளர் என பன்முக தன்மைகொண்ட புனித் ராஜ்குமார், கன்னட மக்களால் ‘அப்பு’ எனச் செல்லமாக அழைக்கப்பட்டார்.இந்நிலையில், அவரது நினைவாக நடிகர் பிரகாஷ் ராஜ், மைசூர் மிஷன் மருத்துவமனைக்கு இலவச ஆம்புலன்ஸ் ஒன்றை நன்கொடையாக வழங்கியுள்ளார். இந்த ஆம்புலன்ஸூக்கு ‘அப்பு’ என்ற புனித் ராஜ்குமாரின் அடைமொழி இணைக்கப்பட்டு, ‘அப்பு எக்ஸ்பிரஸ்’ என்று ஆம்புலன்ஸுக்கு பெயரிடப்பட்டுள்ளது.’கர்நாடக மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இதுபோன்ற ஆம்புலன்ஸ் சேவை செயல்பட வேண்டும் என்பது என் கனவு என்று பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.