புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அருணா மற்றும் ஆதிதிராவிடர் நல அலுவளர் ரவி தலைமையில் இன்று முன்னாள் படை வீரர் துறை சார்பில் 2024-ம் ஆண்டிற்கான கொடிநாள் வரி இலக்கினை 100 சதவீதம் சிறப்பாக செயல்படுத்திய அதிகாரிகளுக்கு பாராட்டு நிகழ்வு நடைபெற்றது

இந்த நிகழ்வில் முன்னாள் படை வீரர் நலனுக்காக 100 சதவீதம் வரி வசூல் செய்து சிறப்பாக பணிபுரிந்த வருவாய் துறை ஊரக வளர்ச்சித்துறை ஆதி திராவிடர் நலத்துறை என 12 துறை அதிகாரிகளை பாராட்டி மாவட்ட ஆட்சியர் அருணா பாராட்டி நற்சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது