தமிழ்நாடு வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவன தலைவர் வேல் முருகன் தனது 40 ஆண்டு கால அரசியல் வாழ்க்கைப் பயணத்தை நிறைவு செய்துள்ளார்.


அவரது அரசியல் பயணத்தைப் போற்றும் விதமாக, ‘களத்தில் வேல்முருகன்’ என்ற பாராட்டு விழா சென்னையில் அமைந்துள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.

இந்தப் பாராட்டு விழாவில் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
வேல்முருகன் அவரது பால்ய கால நண்பரான அமைச்சர் கோ.வி செழியன் தங்கள் நட்பின் ஆழம் குறித்தும், அரசியல் கொள்கைகளில் வேல்முருகன் கொண்டிருந்த அசைக்க முடியாத பிடிப்பு குறித்தும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார்.
திராவிட வெற்றிக் கழகத்தின் நிறுவனர் மல்லை சத்யா களத்தில் வேல்முருகனின் தோழனாக நின்று, அவருடன் இணைந்து களப்பணிகள் ஆற்றிய மலரும் நினைவுகளையும், போராட்டங்களில் அவர் காட்டிய துணிச்சலையும் பகிர்ந்து கொண்டு பாராட்டினார்.

மேலும் இந்தப் பாராட்டு விழாவிற்கு தமிழக அமைச்சர் கே.என்.நேரு, சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் ஆகியோர்கள் வீடியோ மூலம் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த பாராட்டு விழாவில் தமிழக வாழ்வுரிமை கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.




