
எல். கே. பி. நகர் நடுநிலைப் பள்ளியில் முன்னாள் மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் நடைபெற்றது. ஆசிரியர் ராஜ வடிவேல் முன்னிலை வகித்தார். ஆசிரியர் விஜயலட்சுமி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக அய்பா சங்க மதுரை மாவட்டத் தலைவி கவிதா அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். விழாவில் முன்னாள் மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ், மெடல், மரக்கன்று முதலியன பரிசாக அளிக்கப்பட்டன. ஆசிரியை மனோன்மணி தொகுத்து வழங்கினார். ஆசிரியை அனுசியா நன்றி கூறினார். விழாவில் மதுரை மாவட்ட அய்பா சங்க தலைவர், செயலாளர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழு தலைவர் மோகனா, இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள், புதிய பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வலர்கள், பெற்றோர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

