• Fri. Sep 19th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

தலைமை செயற்குழு உறுப்பினர்களாக 80 பேர் நியமனம்: ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்.

ByA.Tamilselvan

Apr 29, 2022

அதிமுக தலைமை செயற்குழு உறுப்பினர்களாக 80 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்
கடந்த சில தினங்களாக மாவட்டம் தோறும் அதிமுக உட்கட்சி தேர்தல் நடைபெற்றுவந்தது. தேர்தல் நடந்து முடிந்ததை தொடர்ந்து புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள்.
நேற்று அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்களாக 74 பேர் நியமனம் செய்து அறிக்கை வெளிவந்தது.இந்த நிலையில் இன்று அ.தி.மு.க. செயற்குழுவுக்கு 80 உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் முன்னாள் அமைச்சர்கள் சரோஜா, செல்வி ராமஜெயம், ராஜலட்சுமி, அ.தி.மு.க. மகளிர் இணை செயலாளர் சக்தி கோதண்டம், துணை செயலாளர்கள் சகுந்தலா, கலைச்செல்வி, அழகு தமிழ்ச்செல்வி, நூர்ஜகான், மணிமேகலை.செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் மரகதம் குமரவேல், இளம்பெண்கள் பாசறை இணை செயலாளர் ராஜலட்சுமி உள்பட 80 பேர் தலைமை செயற்குழு உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.