கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள ஜெம் புற்றுநோய் மையம் சார்பில் மார்பக ஆரோக்கியம் மற்றும் புற்றுநோய் சிகிச்சைக்கான ஜெம் ப்ரெஸ்ட் சென்டரை பிரபல பின்னணி பாடகி அனுராதா ஸ்ரீராம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு துவங்கி வைத்தார்.இந்த புதிய மையம் மார்பக புற்றுநோய் மற்றும் பிற மார்பக நோய்களைக் கண்டறிதல் சிகிச்சை அளித்தல் மற்றும் தடுத்தலில் சிறப்பு மையமாக அமைக்கப்பட்டுள்ளது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பிரபல பாடகி அனுராதா ஸ்ரீராம் கூறியதாவது

மார்பக புற்றுநோய் தற்போது அதிக அளவில் பரவி வருவதால் பெண்கள் அனைவரும் கவனமாக செயல்பட வேண்டும் ஒருவரின் நடை, பாவணையில் மூலமாகவும் அதிகளவில் மனம் அழுத்தம் ஏற்பட்டாலும் மார்பக புற்றுநோய் வரக்கூடும் அதனை பெண்கள் வருடத்திற்கு ஒரு முறை பரிசோதனை செய்து அதற்கு உரிய சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டுமென அறிவுரை வழங்கினார்.

அனைத்து பெண்களும் கூச்சம், பயத்தை விட்டுவிட்டு கட்டாயமாக மார்பக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் பெண்களுக்கு நன்மை கிடைக்கும் என வேண்டுகோள் விடுத்தார்.மக்களாகிய நாம் இந்த பரிசோதனையை கண்டிப்பாக செய்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.இந்த மார்பக புற்றுநோயை குறைப்பதற்கு பொதுமக்கள் நாமும் முயற்சி எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
ஒவ்வொரு பெண்களும் பரிசோதனை செய்து கொண்டு பிற பெண்கள் மற்றும் பொது மக்களுக்கு இது குறித்து கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டும் என பொதுமக்களிடம் வலியுறுத்தினார்.