• Fri. May 10th, 2024

பழங்கால கார் கண்காட்சி – பழைய கார்கள் அணிவகுத்து சென்றதை பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு மகிழ்ந்தனர்…

BySeenu

Jan 5, 2024

கோவையின் பல்வேறு சிறப்புகளை கூறும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் கோவை விழா நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டு கோவை விழாவை முன்னிட்டு, கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள காஸ்மோ கிளப் வளாகத்தில், பழங்கால கார் கண்காட்சி நடைபெற்றது.

இந்த கண்காட்சியை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்து கார்களில் அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

கண்காட்சியில் கோவை உட்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தங்களின் பழங்கால கார்களை காட்சிப்படுத்தினர்.

சுதந்திரத்துக்கு முன் பயன்படுத்திய பல்வேறு வகையான கார்கள் முதல் 1995″ஆம் ஆண்டு வரையுள்ள 100″க்கும் மேற்பட்ட பழைய மாடல் கார்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.

பழைய மாடல் பென்ஸ் , செவர்லே , ஃபோர்டு ,பத்மினி,அம்பாசடர் வோக்ஸ்வேகன் , பழைய ஜீப்,உள்ளிட்ட கார்கள் ரேஸ்கோர்ஸ் பகுதியில் வலம் வந்தன.

திடீரென பழைய கார்கள் அணிவகுத்து சென்றதை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.

தொடர்ந்து பழங்கால கார்கள் பொதுமக்களின் பார்வைக்காக சில நாட்கள் கோவை லூலு மால் வளாகத்தில் வைக்கப்படும் என கோவை விழா ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *