• Wed. Mar 26th, 2025

ஆண்டிபட்டியில் அதிமுக சார்பில் போதை பொருள் ஒழிப்பு மனித சங்கிலி போராட்டம்

ByI.Sekar

Mar 12, 2024

போதைப்பொருளை ஒழிக்கவும், அதன் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும் தவறிய தமிழக அரசை கண்டித்து, தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டம் ஆண்டிபட்டி நகரில் வைகை அணை சாலைப்பிரிவில் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்

போராட்டத்திற்கு ஆண்டிபட்டி அதிமுக ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் லோகிராஜன் தலைமை தாங்கினார்.

ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் வரதராஜன், பேரூர் கழகச் செயலாளர் அருண்மதி கணேசன், மாநில அம்மா பேரவை இணைச் செயலாளர் ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

போராட்டத்தில் தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனையை உடனடியாக தடுக்கக்கோரியும் , போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரியும், வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்தப் போராட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் சுமதி வடிவேல், கணேசன், மகளிர் அணி கொடியம்மாள், மாணவர் பிரிவு முருகேசன் ,மாவட்ட பிரதிநிதி கவிராஜன் ,நிர்வாகிகள் பொன் முருகன், வெள்ளை பாண்டி, ராமச்சந்திரன் வீரக்குமார், சாம்சன் உள்பட ஏராளமானவர் கலந்து கொண்டனர்.