• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

செங்குன்றத்தில் காவல்துறை சார்பில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு…

Byகாயத்ரி

Aug 26, 2022

செங்குன்றத்தில் காவல்துறை சார்பில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட செங்குன்றம் கூட்டு சாலை சந்திப்பில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட செங்குன்றம் காவல் மாவட்ட துணை ஆணையர் மணிவண்ணன் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு குறித்த ஸ்டிக்கர் ஒட்டி துண்டு பிரசுரங்களை வழங்கி வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இதில் செங்குன்றம் சரக காவல் உதவி ஆணையர் முருகேசன், செங்குன்றம் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் ரமேஷ் குற்றப்பிரி ஆய்வாளர் புவனேஸ்வரி, செங்குன்றம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் ராஜேஷ் உட்பட உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் கலந்துகொண்டு போதை இல்லா தமிழகம் உருவாக்கிட நூற்றுக்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகளிடம் விழிப்பு ஏற்படுத்தி ஸ்டிக்கர்களை ஒட்டினர்.