• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சிவகங்கை அரசு இசைப் பள்ளியில் ஆண்டு விழா

ByG.Suresh

Apr 28, 2024

சிவகங்கை மாவட்ட அரசு இசைப்பள்ளியின் 25-ஆவது ஆண்டு விழா மற்றும் தமிழிசை விழா அரண்மனை வாசல் பகுதியில் உள்ள சண்முகராஜா கலையரங்கத்தில் சனிக்கிழமை மாலை சுமார் 5மணிக்கு தொடங்கி இரவு சுமார் 9 மணி வரை நடைபெற்றது.

மதுரை மண்டல கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநர் வ.கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்து மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
சிவகங்கை மாவட்ட மூத்த இசைக்கலைஞர் கண்டனுார் க.வேதமூர்த்தி மற்றும் கலைமாமணி மடப்புரம் கருப்பையா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இதைத்தொடர்ந்து இசைப் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், தமிழிசை விழா சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது

தொடர்ந்து திருப்பரங்குன்றம் தெய்வத் தமிழிசைச் செல்வர் கு.சுப்பிரமணியம் ஓதுவார் பண்ணிசையும், திருப்பரங்குன்றம் தி.சுப்பிரமணியசாமி நரம்பிசை, மதுரை தி.மோகன்ராஜ் முழவிசை, மானாமதுரை ராஜ்குமார் முகர்சிங் என தேவார இன்னிசை நடைபெற்றது.
அதனை தொடர்ந்து பவானி ராமகிருஷ்ணன் வழங்கும் ஸ்ரீ சாய் நிருத்யாலயா ஆர்ட்ஸ் அகாடமி குழுவினர் பரதநாட்டியம் நடைபெற்றது. கலைமாமணி சுரேஷ் வரவேற்றார். தலைமை ஆசிரியர், பரதநாட்டிய ஆசிரியர் எஸ்.கவிதா ஆண்டறிக்கை வாசித்தார். குரலிசை ஆசிரியர் பா.அய்யனார் நன்றி கூறினார். ஏற்பாடுகளை மிருதங்க ஆசிரியர் செ.நாராயணன், வயலின் ஆசிரியர் இரா.தி.ஜெகதீசன், நாதசுர ஆசிரியர் ரா.திருவாசக ரமேஷ், தவில் ஆசிரியர்ரெ.மணிகண்டன் ஆகியோர் செய்தனர்.