அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நாகப்பட்டினம் அபிராமி சன்னதி திடலில் இன்று நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும் வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினருமான ஓஎஸ் மணியன் தலைமையில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணா பொதுக்கூட்டத்தில் நாகை கீழ்வேளூர் வேதாரணியம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான அதிமுகவினர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியம் கூறுகையில் ; எடப்பாடி யார் தமிழக முதல்வராக வரவேண்டும் என தமிழக மக்கள் நினைக்கும் நிலையில் அவர் முதல்வராக வந்து விடக்கூடாது என சில தறுதலைகள் ஏதேதோ செய்து கொண்டும், ஏதேதோ பேசிக் கொண்டும் உள்ளதாக டிடிவி தினகரன் மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகியோரை மறைமுகமாக விமர்சித்தார். தொடர்ந்து பேசிய அவர் புரையோடி போன கால்களை மருத்துவர் வெட்ட சொல்வது போல புரையோடிய மனிதர்களை எடப்பாடி யார் வெட்டி போட்டு இருக்கிறார் என்றும் கட்சியை விட்டுச் சென்ற டிடிவி தினகரன் மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகியோரை கடுமையாக விமர்சித்தார்.

இதுதான் சரியான தேர்வு என்றும், எடப்பாடியின் பாதை சரியான பாதை எனவும் கூறிய ஓ எஸ் மணியன் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சராக அரியணையில் அமர வைப்போம் என்று சூளுரைத்தார்.