ஏழை எளிய மக்களுக்கு எட்டாக்கனியாக இருந்தவற்றையெல்லாம் கிடைக்க செய்தவர் ஜெயலலிதா. ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலம் காற்றையே கழவாடியவர்கள் திமுகவினர் என சிவகங்கை எம் எல் ஏ பேசினார்.
அண்ணாவின் 116 பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்ட நிலையில்
சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில் பேரூராட்சி, தேரடி திடலில் அதிமுக சார்பில் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அதிமுக காளையார் கோவில் ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, சிவாஜி, ஸ்டீபன் அருள்சாமி தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் சிவகங்கை எம்.எல்.ஏ செந்தில்நாதன் , முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு சிவகங்கை எம்எல்ஏ செந்தில்நாதன் பேசுகையில்..,
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற தாரக மந்திரத்தை அதிமுக மட்டுமே கடைப்பிடித்து வருகிறது. திமுக அரசில் போதைப்பொருள் எளிதாக கிடைக்கிறது ஊழல் செய்யும் அரசாக உள்ளது. அதிமுக ஆட்சியில் மக்கள் பயமின்றி பாதுகாப்பான நிலையில் வாழ்ந்தனர். திமுகவினர் இதை மட்டுமல்ல கச்சத்தீவு, முல்லை பெரியாறு ,காவேரி ,மாநில சுயாட்சி உட்பட அண்ணாவின் கொள்கையை குழிதோண்டி புதைத்து விட்டனர். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஏழை எளிய மக்கள் மற்றும் மாணவர்களின் கனவாக எட்டாக்கனியாக இருந்தவற்றையெல்லாம் அவர்களுக்கு கொடுத்து சாதனை படைத்தார். புரட்சி தலைவர் முதல் புரட்சி தமிழர் எடப்பாடி பழனிசாமி வரை தமிழக மக்களுக்கு எது தேவை என்பதை அறிந்து மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி மக்கள் நல அரசாக இருந்தது. திமுக அரசு ஏழை எளிய உழைக்கும் தொழிலாளர்களின் பசியை போக்கி வந்த அம்மா உணவகத்தை நிதி இல்லை என்று கூறி ஒவ்வொன்றாக மூடி வருகின்றனர். ஆனால் நூறுகோடி ரூபாய் செலவில் கார்பந்தையத்தை நடத்தி மக்கள் பணத்தை வீணடித்துள்ளனர் . காற்றையே கழவாடும் கும்பல் திமுகவினர் 2ஜி அலைக்கற்றை ஏலம் மூலம் அதனை செய்து ஊழல் வழக்கில் சென்றனர். மீண்டும் திமுகவினரிடம் ஏமாறாமல் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் புரட்சி தமிழர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக அரசு அமைந்திட தொண்டர்கள் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும் என்று பேசினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக செயலாளர் செந்தில் நாதன் எம். எல். ஏ முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உமாதேவன் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் இளங்கோவன் ஒன்றியச் செயலாளர்கள் சிவாஜி, அருள்ஸ்டீபன், கருணாகரன், செல்வமணி, சேவியர் தாஸ் மற்றும் ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
