• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணங்கள் விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் எதிரொலிக்கும் என, அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி…

BySeenu

Jun 23, 2024

மக்களின் உரிமைக்காக போராடும் கட்சி எனக் கூறிக் கொள்ளும் கம்யூனிஸ்டுகளும், காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சிகள் இத்தனை மரணங்கள் நிகழ்ந்தும், இதுவரை அமைதி காப்பது ஏன் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பினார். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணத்திற்கு பொறுப்பேற்று திமுக பதவி விலக வேண்டும் என ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக உரிய முறையில் அனுமதி கடிதம் கொடுத்தும், காவல்துறை அனுமதி மறுத்துள்ளது என்றார்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணம் குறித்து முதல்வர் மு க ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி கோவையில் இன்று பாஜகவினர் ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டம் நடத்தினார்கள். இதில் 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். கோவை ராம் நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த பாஜக தொண்டர்களை நேரில் பார்த்து அண்ணாமலை ஆறுதல் கூறி ஆர்ப்பாட்ட நிகழ்வு குறித்து கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அண்ணாமலை, திமுக அரசு பாஜகவை பார்த்து பயப்படுகிறது என்றார். பாஜக முறையாக போராட்டம் நடத்த அனுமதி கேட்டும், காவல்துறை கொடுக்கவில்லை எனக் கூறினார். திமுக அரசு தமிழக முழுவதும் பலவிதமான போதை வஸ்துகளை விற்பனை செய்து, இளைய சமுதாயத்தை சீரழித்து வருவதாக குற்றம் சாட்டினார். டாஸ்மார்க் கடைகளில் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது எனக் கூறிய அண்ணாமலை, கள்ளக்குறிச்சியில் மரணமடைந்தவர்கள் அனைவரும் ஏழை எளிய மக்கள், இறந்த 55 நபர்களுமே கூலி தொழிலாளர்கள். கூலி வேலை செய்து 25 ரூபாய்க்கு சாராயம் குடித்து மரணித்திருக்கிறார்கள் என வேதனை பட்டார். கள்ளச்சாராயத்தை அனுமதிதற்க்கு திமுக தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்றார். இன்று பிற்பகல் தமிழக ஆளுநருக்கு அலைபேசியில் அழைத்து புகார் செய்துள்ளதாகவும், தனி மனித சுதந்திரத்தை திமுக பறிக்கிறது எனக் கூறினார். அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறையில் அனுமதி கேட்டும், நிராகரிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், எங்கள் கருத்து சுதந்திரம் பறிக்கப்பட்டு இருக்கிறது என்றார். இது தொடர்பாக திங்கள் கிழமை பாஜக குழு தமிழக ஆளுநரை நேரில் சென்று சந்திப்போம் என்றார். தமிழக மக்களின் வாழ்வுரிமையை பறிக்கும் திமுக அரசு, தொடர்ந்து ஆட்சியில் இருக்க வேண்டுமா என கேள்வி எழுப்பினார். செங்கல்பட்டில் நடந்த விழாவில், ஒரு குற்றவாளிக்கு அமைச்சர் செஞ்சு மஸ்தான் கேக் ஊட்டி விடுவதே தமிழக அமைச்சர்களின் முகத்திரையை கிழிப்பதாக உள்ளது என்றார். உள்துறை அமைச்சருக்கு தமிழகத்தில் கள்ளச்சாராயண மரணம் குறித்து கடிதம் எழுதி இருப்பதாகவும், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடந்தால் மட்டும் தான் உண்மை நிலவரம் தெரியவரும் என்றார். வாராவாரம் கள்ளச்சாராய கண்காணிப்பு குழு கூட்டம் நடப்பதாக முதல்வர் தெரிவித்திருந்தார், அது முழு பொய் அப்படி கூட்டம் நடந்திருந்தால் அதன் ஆதாரத்தை முதல்வர் வெளியிட வேண்டும் என கேட்டுக்கொண்டார். மக்கள் மரணம் குறித்து எப்பொழுதும் கம்யூனிஸ்ட் கட்சிகள், முதல் குரல் எழுப்புவார்கள் ஆனால். கள்ளக்குறிச்சி சம்பவத்தில் அமைதி காப்பதை பார்த்தால், இதைவிட வெட்கக்கேடு எதுவும் இல்லை என்றார். செல்வப் பெருந்தகை, திருமாவளவன் ஆகியோர் அமைதி காக்கின்றனர். இதனை தட்டிக் கேட்காமல் எங்கே போனது உங்கள் மான ரோஷம், திமுக கூட்டணி கட்சிகள் முழு அடிமைகள் என்பதை உறுதிப்படுத்துகிறது என்றார். இதுவரை ஒரு கண்டன குரலும் பதிவு செய்யவில்லை என கேள்வி எழுப்பினார். முதல்வர் ஏன் கள்ளக்குறிச்சி செல்லவில்லை என கேள்வி எழுப்பிய அண்ணாமலை, இத்தனை மரணங்கள் நடந்த நிலையில் டிஜிபியும், முதல்வரும் கள்ளக்குறிச்சியில் முகாமிட்டு நடந்தவற்றை கவனத்திற்கு வேண்டும் என்றார். முதல்வரால் கள்ளக்குறிச்சிக்கு செல்ல முடியாது என கூறியவர், மக்கள் அவரை கள்ளக்குறிச்சிக்குள் விட மாட்டார்கள் என்றார். காவல்துறை அமைச்சர் முதல்வராக இருக்கிறார். டாஸ்மார்க் அமைச்சராக முத்துசாமி இருக்கிறார். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் கலெக்டர், எஸ்பி மீது ஏன் நடவடிக்கை எடுத்து கண் துடைப்பு நாடகம் நிகழ்த்துகிறார்கள் என்றார். கூட்டணிக் கட்சிகள் ஒருவரை ஒருவர் பாராட்டிக்கொள்வது, மக்கள் இவர்களை பார்த்து அழுவதா சிரிப்பதா என தெரியவில்லை என குறிப்பிட்டார். கல்வராயன் மலை உச்சியில் இந்த சாவுகள் நடைபெறவில்லை என சுட்டிக்காட்டியா அவர், கள்ளக்குறிச்சி நகரில் மையப்பகுதியில் இந்த மரணங்கள் நடந்தேறி இருக்கின்றன எனக் கூறினார். பட்டியலின மக்களுக்கான தேசிய ஆணையம் தமிழகத்துக்கு வர வேண்டும். கள்ளக்குறிச்சியில் இருந்த பட்டியலினம் மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். எஸ்சி, எஸ்டி பிரிவில் வழக்கு பதிவு செய்தால், மேலும் 3 லட்சங்கள் தலா ஒவ்வொரு குடும்பத்திற்கும் கிடைக்கும் என்றார். கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த வேண்டுமே தவிர, குடித்தபின் நிவாரம் கொடுப்பது சரியாகுமா என கேள்வி எழுப்பி அவர், ஈம காரியம் செய்வதற்கு கூட இறந்து போனவர்களின் குடும்பத்தில் பணம் இல்லை என வேதனை பட்டார். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணங்கள் விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் எதிரொலிக்கும் என தெரிவித்தார். காவல்துறை கடமையை செய்து இருக்கிறது, என்னை யாரும் வீட்டில் கைது செய்யவில்லை என்றார். இன்று நடந்த பாஜக போராட்டத்தில் எந்த அசம்பாவிதமும் நடைபெறவில்லை எனக் கூறியவர், சட்டத்திற்கு கட்டுப்படுகிறோம் என்றார். நீதிமன்ற அனுமதி பெற்று மீண்டும் மக்களுக்காக போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.