வாக்கு பதிவுக்கு பின் பல்வேறு ஊடகங்கள் தெரிந்த கருத்து கணிப்புகளை எல்லாம் பொய்யாக்கு மூன்று மாநில மக்களின் நம்பிக்கையின் வெளிப்பாடு மட்டுமே அல்ல. 2024_க்கு பாஜக பெரும் வெற்றியின் ஒரு முன்னோட்டம்.
பிரதமர் தலைமையில் ஆன ஆட்சி மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க போகும் உறுதியின் வெளிப்பாடு மாநிலத்தின் முதல்வர் என எவரையும் அறிவிக்காது தேர்தல் நடத்தியுள்ளோம்.
மத்திய அரசின் ஈடி அலுவலகத்தில் புகுந்த புலனாய்வு துறையினர் யார், யார். அண்ணாமலை கேள்வி.
அங்கித் திவாரி குறித்த விசாரணை என்ற பெயரில் 35 பேர் மத்திய அரசின் அலுவலகத்திற்குள் புகுந்தது குறித்து தமிழக டிஜிபி யிடம் ஈடி அதிகாரிகள் கொடுத்த புகார் குறித்து, தமிழக டிஜிபி செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் கொடுக்க வேண்டும் என நாகர்கோவிலில் பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை தெடர்ந்து தெரிவித்தது.
மத்திய அரசின் அலுவலகத்தின் மாண்பை காக்க வேண்டிய கடமையை மறந்து, ஈடி அலுவலகத்தில் புகுந்த 35_பேரில், நான்கு பேர் மட்டுமே சீர் உடையில் அடையாள அட்டையுடன் வந்துள்ளனர்.ஏனைய 31_பேர் யார்.? தமிழக அமைச்சர்களின் உதவியாளர்களா.? என்ற சந்தேகம் வருகிறது.
மத்திய அரசின் அலுவலகத்தின் உள் புகுந்தவர்கள் அலுவலகத்தில் இருந்த பாதுகாக்க பட்ட பயில்கள்,சில இன்பார்மர்களின் குறிப்புகள் உள்ள நிலையில்.தமிழக டிஜிபி நேர்மையான முறையில் ஈடி அதிகாரிகளின் புகார் குறித்து உகந்த விளக்கம் தரவேண்டும்.
மத்திய அரசின் அலுவலகத்தின் உள் புகுந்த 35_பேர்களில் அலுவலகத்தில் உள்ள பஞ்ஞனமாவில் 4_ங்கு பேர் மட்டுமே உரிய ஆவணங்களில் கையெழுத்து இட்டுள்ளனர் ஏனைய 31_பேர் யார் என அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.
நிகழ்வில் பொன்.இராதாகிருஷ்ணன், திருநெல்வேலி பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் பங்கேற்றனர்.





